Cinema News
யார் என்ன கொக்கி போட்டாலும், சொல்லிடாதீங்கணே… லோகேஷ் பேச்சை மீறாத லியோ படக்குழு!
லியோ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படு பிஸியாக சுற்றிவருகிறார். தன்னுடைய லைட்மேன் முதல் முன்னணி நட்சத்திரம் வரை என அவர் கோரிக்கையை வரிசையாக வைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
லோகேஷ் தன்னுடைய சூப்பர்ஹிட் படமான விக்ரமுக்கு பின்னர் இயக்கி வரும் படம் தான் லியோ. விஜயும் வாரிசு படத்தினை தொடர்ந்து லியோவில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட படத்தினை மாபெரும் வெற்றி படமாக்க வேண்டும். தன்னுடைய ஹிட் வரிசையை காப்பாற்ற வேண்டும் என லோகேஷ் தான் ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறார்.
சமீபத்தில் கூட அர்ஜூனின் ஹரோல்ட் தாஸ் எண்ட்ரி வீடியோ வெளியாகியது. பலரும் அதில் பல விதமாக டீகோட் செய்து வீடியோ வெளியிட்டனர். அதை விட அந்த வீடியோவில் தெரிந்த எல்லா நடிகர்களையும் பேட்டி எடுக்க மீடியாக்கள் வரிசை கட்டியது. அதில் ஒருவர் தான் தவசி ராஜன்.
இதையும் படிங்க : எல்லோர் முன்னிலையிலும் கன்னத்தில் பளார்விட்ட விஜயகாந்த்.. வன்மம் வளர்த்து பழிவாங்கிய வடிவேலு!..
பல வருடமாக சினிமாவில் பைட்மேனாக இருக்கும் இவரை பல மீடியாக்கள் லியோ எப்படி இருக்கும்? என்ன கதை என விதவிதமாக கேள்வி எழுப்பினர். ஆனால் அவரை எல்லாவற்றுக்கு சிரித்துக்கொண்டே தட்டி விட்டார். அதிகபட்சமாக சண்டைக்காட்சிகள் ரொம்ப உயர்தரமாக இருக்கும்.
பைட் மாஸ்டர்கள் அன்பறிவு வித்தியாசமாக இப்படத்தில் முயன்று இருக்கின்றனர். இதை மட்டுமே தொடர்ந்து கூறினார். டிசைன் டிசைனாக கேள்வி கேட்டாலும் அவரிடம் இருந்து வேறு எந்தவித தகவல்களையுமே எடுக்க முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் லோகேஷ் கனகராஜ் தானாம். தன்னுடைய படக்குழு ஒருவரை கூட விடாமல் எந்த வித தகவல்களும் பட ரிலீஸை நெருங்கும் வரை வெளியில் கசியவே விடக்கூடாது. யார் கேட்டாலும் மழுப்பி விட்டு வாருங்கள் என்பதை தொடர்ந்து சொல்லி கொடுக்கிறாராம்.
இதையும் படிங்க : பேர கேட்டதும் ‘அரோகரா’ என கேலி செய்த கும்பல்.. அப்ப கூட ரஜினி அதை மாத்தவே இல்லையாம்!..
இதனால் தான் எப்போதுமே உண்மையை உளறும் மன்சூர் அலிகான் கூட கப்சிப்பென இருக்கிறாராம். இப்படி சீக்ரெட்டாக வைப்பதன் மூலம் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அது படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸாகவும் அமையும் என்பது தான் லோகேஷின் ஐடியாவாக இருப்பதாக கூறப்படுகிறது.