Connect with us

Cinema News

லால் சலாம் படத்துல ஐஸ்வர்யா என்ன பண்ணியிருக்காங்க தெரியுமா?.. லொள்ளு சபா மனோகர் ஓபன் டாக்!

லால் சலாம் படத்தில் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லொள்ளு சபா மனோகர் பல வருடங்கள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததே பெரிய விஷயம் என ஹேப்பி ஆகியுள்ளார்.

காலையில் சூட்டிங் ஸ்பாட்டுக்கு எப்படி வருகிறாரோ அதே போலத்தான் இரவு படப்பிடிப்பு முடியும் வரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அமைதியாகவும் அன்பாகவும் நடந்துக் கொள்வார். எப்போதும், அய்யா சாப்பிட்டீங்களா, ஷாட் எடுக்கலாமா அய்யான்னு தான் என்னையே கேட்பார் என பூரித்துப் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: லியோ 2 எடுக்குற வரைக்கும் இப்படியே வெயிட் பண்ண வேண்டியதுதான் போல!.. மடோனா செபாஸ்டியன் நெக்ஸ்ட் என்ன?

லால் சலாம் படத்தில் இஸ்லாமியர்களை உயர்வாக காட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற மத நல்லிணக்க கருத்துக்களை தான் இந்த படம் பேசப் போகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே மொய்தீன் பாயாக நடிக்க வைத்திருக்கிறார். படம் சூப்பரா வந்துருக்கு எனக்கும் செந்தில் சாருக்கும் இடையே காம்பினேஷன் காட்சிகள் எல்லாம் இருக்கு என லொள்ளு சபா மனோகர் லால் சலாம் படத்தை பற்றி பல அப்டேட்களை கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: அடுத்த பட ஷூட்டிங்கையும் முடித்த லேடி சூப்பர் ஸ்டார்!.. இந்த டெஸ்ட்டாவது சிக்ஸர் அடிக்குமா?..

ஏ.ஆ. ரஹ்மான் இசையில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த், செந்தில், தம்பி ராமையா, தான்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  தமிழர்களை இழிவுப்படுத்திய தான்யா பாலகிருஷ்ணனை லால் சலாம் படத்தில் விக்ராந்துக்கு ஜோடியாக்கி நடிக்க வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்கிற சர்ச்சையும் வெடித்திருக்கிறது.

அடுத்த வாரம் வெளியாக உள்ள லால் சலாம் படம் எப்படி ஓடப் போகிறது என்கிற ஆர்வம் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. லால் சலாம் இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிறு மாலை 3 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top