Categories: latest news

உன் உடம்பு இன்னும் புஸுபுஸுனு இருக்கனும்.! பிக் பாஸ் லாஸ்லியாவை வம்பிழுக்கும் மெகா ஹிட் இயக்குனர்.!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கலந்துகொள்ளும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் சினிமாவில் சாதிப்பதற்கு ஒரு விசிட்டிங் கார்டு கிடைக்கிறது. அந்த அறிமுக கார்டை வைத்துக்கொண்டு சரியாக பயன்படுத்தி வெற்றியை நோக்கி பயணிப்பவர்கள் வெகு சிலரே.

அதில் ஒருவர் தான் லாஸ்லியா. அதில் கிடைத்த ரசிகர்களை அப்படியே வைத்துக்கொண்டு, புது புது படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடிப்பில் ஃபிராண்ட்ஷிப் எனும் திரைப்படம் வெளியானது.

அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் தான் கூகுள் குட்டப்பா. இந்த படம் , மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் எனும் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக். இப்படத்தில் முக்கிய வேடத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடித்து இருப்பார். பிக் பாஸ் மூலம் பிரபலமான தர்ஷன் தான் ஹீரோவாக இப்படத்தில் லாஸ்லியாவுக்கு ஜோடியாக நடித்து இருப்பார்.

இதையும் படியுங்களேன் – தளபதி விஜய்க்கே டஃப் கொடுக்கும் உதயநிதி.! வெளியானது வேற லெவல் வீடியோ..,

அந்த பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு பேட்டியில் லாஸ்லியா மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் கலந்து கொண்டனர். அப்போது, கே.எஸ்.ரவிக்குமார் , தமிழ் சினிமாவுக்கு எப்போதும் ஹீரோயின் குண்டாக புஸுபுஸுனு இருந்தான் பிடித்து போகும். நீயும் அதே போல புஸுபுஸுனு மாறவேண்டும். ஒல்லியாகி கொண்டே சென்றால், நீ பாலிவுட் சென்றுவிடு’ என செல்லமாய் லாஸ்லியவை வம்பிழுத்து கொண்டிருந்தார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

Published by
Manikandan