More
Categories: Cinema News latest news

கடுப்பில் இருக்கும் விஜய் தேவரகொண்டா…! கிஸ் மட்டும் இல்லை… ஓவர் வெறுப்பேத்தும் ராஷ்மிகா..!

Rashmika Mandanna: தமிழ் சினிமாவின் அடுத்த காதல் ஜோடியாகி இருக்கிறார்கள் ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் தான். இருவரும் அடிக்கடி ஒரே இடத்தில் போட்டோ போட்ட கதையெல்லாம் ஊர் அறிந்த செய்தி தான். ஆனால் தற்போது காதல் ஜோடி கடுப்பில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

சமீபத்தில் சமந்தாவுடன், விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்த திரைப்படம் குஷி. ஒரே படத்தில் எக்கசக்கமான ரொமான்ஸ் காட்சிகளை படத்தில் வைத்து இருந்தார்கள். பார்க்கவே சிலருக்கு கடுப்பானால் கூட பல வருடம் கழித்து சமந்தாவின் ரீ எண்ட்ரி அனைவராலும் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: 22 முறை மோதிய விஜயகாந்த் – கமல்ஹாசன் படங்கள் : அதிக ஹிட் கொடுத்தது யார் தெரியுமா?…

இந்த படத்தால் ராஷ்மிகா மந்தனா செம கடுப்பாகி விட்டாராம். நீ மட்டும் அப்படி அந்த ஹீரோயினோட நடிக்கலாம். இருவருக்கும் கல்யாணம் வரை சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்ததும் அவரை இன்னமும் கோபப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தான் அனிமல் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ரொமான்டிக் பாடல் ஒன்று ரிலீஸானது. அதில் இருவரும் லிப்லாக் அடிக்கும் காட்சிகள் இருந்தது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது.

மேலும் இப்படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அர்ஜூன் ரெட்டி படத்தினை இயக்கியவர். ஏற்கனவே ரொமான்ஸில் ஓவர் டோஸ் கொடுக்கும் இயக்குனர் இந்த படத்திலும் நிறைய படுக்கை அறை காட்சிகளை வைத்து இருக்கிறாராம்.

இதையும் படிங்க: எப்ப பாத்தாலும் ‘லியோ’ பத்தியே பேசுறீங்களே! சத்தமில்லாமல் ரோலக்ஸ் செய்ற காரியத்தை பார்த்தீங்களா?

இதில் ராஷ்மிகாவும் பெத்த தொகையை சம்பளமாக வாங்கி விட்டதால் எல்லா அட்ஜெஸ்மெண்ட்டையும் செய்து நடித்து கொடுத்து விட்டாராம். அப்போது தான் தொடர்ச்சியாக பாலிவுட்டில் வாய்ப்பு இருக்கும் என்பதற்கும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லையாம். ஆனால் இது தேவரகொண்டாவிற்கு பிடிக்கவில்லையாம்.

காதலர்கள் இருவருக்கும் இந்த பிரச்னை பெரிதாகி சண்டையாகி இருக்கிறதாம். நீ நடிச்சல என ராஷ்மிகா கேட்க, ஒரு கட்டத்தில் இருவரும் சில நாட்களாக பேசாமலே இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்து பிரச்னையை முடிப்பார்களா இல்லை ப்ரேக் அப்பே ஆகிவிடுமா என சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்து இருக்கிறது.

Published by
Akhilan

Recent Posts