லவ் டுடே படத்தில் விஜயிற்கு நன்றி சொன்னது சரி... இவருக்கு ஏன் சொல்லல... கடுப்பில் நெட்டிசன்கள்...

by Akhilan |   ( Updated:2022-11-08 05:47:18  )
லவ் டுடே
X

லவ் டுடே

வெற்றி பெற்ற படத்தின் பெயரை வைத்து ஒரு படத்தினை எடுப்பது தற்போது அதிகரிக்க துவங்கி இருக்கிறது. விஜய் நடிப்பில் மாஸ் ஹிட் அடித்த லவ் டுடே படத்தின் பெயரில் பிரதீப் ரங்கநாதனின் நடித்து வெளிவந்து இருக்கு லவ் டுடே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இருந்தும் ஒரு சில சர்ச்சைகளும் றெக்கை கட்டுகிறது.

லவ் டுடே

லவ் டுடே

ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இப்படத்தில் விஜய் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரிக்கு நன்றி தெரிவித்து இருந்தார். ஆனால் அப்படத்தின் இயக்குனர் பாலசேகரனுக்கு நன்றி கூறவில்லை.

இதுகுறித்து தனது பேஸ்புக்கில் எழுதி இருக்கும் பாலசேகரனின் உதவி இயக்குனராக இருந்த அஜயன் பாலா கூறுகையில், நான் பாலசேகரனிடம் உதவி இயக்குனராக இருந்த போது எடுக்கப்பட்ட படம் விஜய் நடித்த ‘லவ் டுடே’. தற்போது இந்த பெயரில் உருவாகி இருக்கும் இப்படத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரிக்கு நன்றி சொன்ன ப்ரதீப், கூடவே இயக்குநர் பாலசேகரனுக்கும் ஒரு நன்றியை சொல்லியிருக்கலாம்.

லவ் டுடே

லவ் டுடே பாலசேகரன்

இதுகுறித்து அவரிடம் கேட்டேன். மரியாதை நிமித்தமாக கூட யாரும் அவரிடம் சொல்லவில்லை எனக் கூறினார். பொதுவாக அவரினை சினிமா உலகில் லவ் டுடே பாலசேகரன் எனத் தான் அழைப்பார்கள். இனி அப்படி அழைக்க தயங்குவார்களே என்றார். பலரும் சமூக வலைத்தளங்களில் இதே கேள்வியை கேட்க துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story