எம்புரான்: வசூலில் இந்த ஆண்டின் முதல் மலையாளப் படம்… 2ம் நாளில் இத்தனை கோடியா?!

by sankaran v |   ( Updated:2025-03-28 21:04:59  )
empuraan
X

#image_title

பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கிய லூசிபர் 2 எம்புரான் 67.50 கோடி வசூலைப் பெற்றது. 2வது நாளில் உலகளவில் 100 கோடியைத் தாண்டியது. இதன் மூலம் 9 நாள்கள் வசூலில் எடுத்த ஆடுஜீவிதத்தை முறியடித்து மிக வேகமாக 10வது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் 100 கோடிகளைக் கடந்து வசூலித்த 9 மலையாளப் படங்கள் உள்ளன. மேலும் சூப்பர்ஸ்டார் மோகன்லாலில் அதிரடி ஆக்ஷன் படமான எம்புரான் இந்த வரிசையில் 10வது இடத்தை வேகமாக எட்டிப் பிடித்துள்ளது.

எம்புரான் படம் உள்நாட்டில் பாக்ஸ் ஆபீஸ்ல 40 கோடிகளை வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் 60 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் செஞ்சுரி அடித்த இந்த ஆண்டின் முதல் மலையாளத் திரைப்படம் இதுதான்.

empuran 2nd dayசனிக்கிழமைக்குள் (இன்று) இப்படம் மலையாளத்தில் 5வது இடத்தைப் பிடிக்கும் வகையில் மிகப்பெரிய வசூலை ஈட்டும். அதே போல ஞாயிற்றுக்கிழமை (நாளை) 2வது இடத்திற்கு வந்து விடும். தொடர்ந்து ரம்ஜான் விடுமுறையும் திங்கள்கிழமை வருவதால் மாலிவுட்டின் மிகப்பெரிய வசூல் படமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் மஞ்சுமெல் பாயஸ் படம் தான் 241 கோடிகளைப் பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேக்னில்க் அறிக்கையின்படி இந்திய அளவில் முதல் நாளில் 21.5 கோடி. 2ம் நாளில் 11.75 கோடி. ஆக மொத்தம் 33.25 கோடி. வீரதீர சூரன் இந்திய அளவில் முதல் நாள் வசூல் 3.4கோடி. 2வது நாள் வசூல் 3.25 கோடி. மொத்தம் 6.65 கோடி. மலையாளப்பட உலகில் எம்புரான் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் ரசிகர்கள் சிலாகித்து சொல்கின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை வீரதீர சூரனுக்கு எம்புரானை விட நல்ல வரவேற்பு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story