நான்லீனியர் கதைன்னு இப்படி குழப்பி வச்சிருக்காங்க… எம்புரானைக் கிழி கிழின்னு கிழிச்ச புளூசட்டை மாறன்

by sankaran v |   ( Updated:2025-03-28 06:33:37  )
lucifer 2
X

lucifer 2

Empuran review: மோகன்லால் நடிப்பில் நேற்று வெளியான எம்புரான் படத்தைப் பற்றி பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் பொளந்து கட்டி இருக்கிறார். வாங்க வழக்கம்போல என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.

இயக்குனர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் லூசிபர் 2 எம்புரான்.

இந்தப் படத்தின் கதைப்படி கேரளா முதல்வர் ஒரு அறிக்கை விடுறாரு. தான் சேர்ந்த கட்சியை விட்டு வெளியேறி புதுசா ஒரு கட்சியை ஆரம்பிக்கப் போவதாக சொல்றாரு. அது மதம் சம்பந்தப்பட்டதா இருக்குது. அதனால அரசியல் கட்சி மதப்பின்னணியில இருக்குது.

lucifer 2 empuranமதத்தையும், அரசியலையும் பக்கத்துல பக்கத்துல வச்சா நெருப்பையும், பொறியையும் பக்கத்துல வச்ச மாதிரின்னு ஹீரோ கேள்விப்படுறாரு. 5 வருஷத்துக்கு முன்னால கேரளாவை விட்டு வெளியே போன ஹீரோவுக்கு இந்த விஷயம் தெரிய வருது. மீண்டும் கேரளா வந்து அவர் என்ன செய்றாருங்கறதுதான் கதை.

கட்சிக்குள்ள மதம் கலந்துட்டுன்னா கட்சியும், மக்களும் கெட்டுப்போவாங்க. அதனால கேரள மக்களைக் காப்பாற்றணும்னா இதுக்கு ஏதாவது பண்ணனும். அப்படின்னு சொல்லி ஆரம்பிக்கற இந்தக் கதை கேரளாவுக்குள்ளேயே நடக்கல.

இன்னும் சொல்லப்போனா இந்தியாவுக்குள்ளேயே நடக்கல. எப்பப் பார்த்தாலும் ஏதாவது ஒரு வெளிநாட்டுலயே ஹெலிகாப்டர்ல சுத்திக்கிட்டு இருக்காங்க. கேரளாவை சம்பந்தப்படுத்தவே இல்லை. வெளிநாட்டுலயே சுத்திக்கிட்டு இருக்காங்க. கேரளாவுல நடக்குற கதையோட ஒட்டவே இல்லை.

படத்தோட கதையை விட்டுட்டு லூசிபர்னா யாருன்னு தெரியுமாங்கற பில்டப் தான் ஓடிக்கிட்டே இருக்கு. ஒவ்வொரு 10 நிமிஷமும் மோகன்லாலுக்கு என்ட்ரி கொடுக்குறாங்க.

அவுட் ஆப் போகஸ்ல, பிரேமுக்குள்ள, அப்புறம் லெப்ட், ரைட்னு என்ட்ரி கொடுக்குறாரு. இது படத்துக்காக எடுத்த மாதிரி இல்லை. மோகன்லால் புரொமோவுக்காக எடுத்த மாதிரி இருக்கு. ஒட்டுமொத்தமாவே 15சீன்தான் இருக்கும்போல. எல்லாமே நீளமா இருக்கு. கதையை நான்லீனியர்ல சொல்றன்னு பாதி சீனை இப்ப காட்டுவாங்க. மீதியை அப்புறம் காட்டுவாங்க. வேற ஒரு சீன்ல பாதியைக் காட்டுவாங்க. இப்படியே குழப்பி வச்சிருக்காங்க.

லூசிபர் 1ல நல்ல சென்டிமென்ட் இருக்கும். நல்ல எமோஷன் இருக்கும். இதுல அப்படி எதுவுமே கிடையாது. யாருகூடயும் எதுலயும் ஒட்டாம இருக்கும். இது ஜேம்ஸ் பாண்டு படம் பார்த்த மாதிரி இருக்கும். அதுலயாவது கொஞ்சம் கதை இருக்கும். இதுல கதையே கிடையாது. வெறும் மேக்கிங்க நம்பித்தான் பண்ணிருக்காங்க. கேமரா, மியூசிக், நல்ல செலவுன்னு எல்லாமே இருக்கு. படம் மட்டும்தான் நல்லா இல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story