“போதும் டா சாமி!”… வடிவேலுக்கு கும்பிடு போட்ட லைக்கா நிறுவனம்…
தமிழின் மாபெரும் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் வடிவேலு, தற்போது “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”, “மாமன்னன்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் “சந்திரமுகி 2” திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்பு “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது வடிவேலு சரியாக ஒத்துழைப்பு தராத நிலையில் படம் பாதியிலேயே நின்றுபோனது. இதனை தொடர்ந்து அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலுவால் பல கோடிகள் நஷ்டம் அடைந்ததாக புகார் அளித்தார். அதனை தொடர்ந்து வடிவேலுவுக்கு சினிமாவில் நடிக்க ரெட் கார்டு போடப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் சுமூகமாக தீர்வு கண்ட நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு வடிவேலு சினிமாவில் நடிப்பதற்கான தடை நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்துதான் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”, “மாமன்னன்”, “சந்திரமுகி 2” போன்ற திரைப்படங்களில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமானார்.
இதில் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”, “சந்திரமுகி 2” ஆகிய திரைப்படங்களை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு சக்திவேல், லைக்கா நிறுவனம் எடுத்துள்ள முக்கிய முடிவு குறித்தான ஒரு தகவலை தனது வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு வந்த பிரம்மாண்ட பிராஜக்ட்… ஷங்கரின் ஆசையை கலைத்த சன் பிக்சர்ஸ்… அடக்கொடுமையே!!
அதாவது “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்தின் விவகாரம் எழுந்தபோது அந்த பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைக்க உதவியது லைக்காதான். அதனை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் திரைப்படங்களில் ஒப்பந்தமானார் வடிவேலு.
இனிமேலாவது வடிவேலு நன்றாக ஒத்துழைப்பு தருவார் என லைக்கா நிறுவனத்தினர் நினைத்தார்களாம். ஆனால் வடிவேலுவின் நடத்தையில் எந்த மாற்றமும் இல்லையாம். ஆதலால் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”, “சந்திரமுகி 2” ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு தனது நிறுவனம் தயாரிக்கும் எந்த திரைப்படத்திலும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என லைக்கா நிறுவனம் முடிவெடுத்துள்ளதாம்.