ராகவா லாரன்ஸ் செஞ்ச வேலை!.. நெகிழ்ந்துபோய் சுபாஷ்கரன் என்ன செய்தார் தெரியுமா?...

by Rohini |   ( Updated:2023-08-30 02:13:43  )
ragava
X

இந்திய சினிமா படங்களை தயாரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனமாக லைக்கா நிறுவனம் திகழ்ந்து வருகிறது. பெரிய பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து அதிக லாபம் ஈட்டிய ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனமாக லைக்கா திகழ்கிறது. தமிழ் மற்றும் இந்தியில் பல படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் மூலம் மிகப்பெரிய வசூலை சந்தித்த படங்களாக 2.0, பொன்னியின் செல்வன் போன்ற படங்களை சொல்லலாம். மேலும் சமீபகாலமாக பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களை பெரும்பாலும் தயாரிப்பது லைக்கா நிறுவனம்தான்.

அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் லால் சலாம், லாரன்ஸின் சந்திரமுகி 2, போன்றவை ரிலீஸுக்காக காத்திருக்கும் படங்களாகும். இந்த நிலையில் இயக்குனர் பி.வாசு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லைக்கா நிறுவனத்தை பற்றியும் அது நடத்துகின்ற முறையை பற்றியும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : சம்மந்தி லியோவில் பிசியா இருக்காரு!.. ஐஸ்வர்யாகிட்ட பிடிச்ச விஷயம் இதுதான்!.. தம்பி ராமைய்யா பளிச்!..

அதாவது சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தை சிவாஜி புரடக்‌ஷன்ஸ் தான் தயாரித்தது. ஆனால் இரண்டாம் பாகத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த இரண்டு நிறுவனத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று பி.வாசுவிடம் கேட்டபோது என் குடும்பத்தை மிகவும் மிஸ் பண்ணேன் என்று கூறினார்.

அதாவது சிவாஜி புரடக்‌ஷன்ஸ் ஒரே குடும்பமாக பழகுவார்கள், சகோதரரை போல் நடத்துவார்கள், சாப்பாடு விஷயத்தில் பிரபுவை குறை சொல்ல முடியாது, வீட்டில் இருந்தே எல்லாம் தயார் ஆகி செட்டுக்கு வந்து விடும். ஆனால் லைக்கா நிறுவனத்தை பொறுத்தவரைக்கும் அதை எதிர்பார்க்க முடியாது என்று கூறினார்.

அதாவது சிவாஜி புரடக்‌ஷன்ஸ் என் குடும்பம், லைக்கா நிறுவனம் என்பது அதில் பணியாற்றுகின்ற ஊழியர் நான் என கூறினார். மேலும் சுபாஸ்கரனை பார்க்கும் போது ஒரு டைரக்டரிடம் பழகுகிற உணர்வுதான் ஏற்படும் என்று கூறினார்.

அதே போல் தமிழ்க் குமரனும் லைக்கா 1ஐ லைக்கா 10ஆக மாற்ற முயற்சிக்கிறார். ஏகப்பட்ட புரடக்‌ஷனை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு கார்ப்ரேட் கம்பெனி மாதிரிதான் இயங்குகின்றது. லண்டனிலும் ஏகப்பட்ட பிஸினஸ்களை பார்க்கிறார்கள். அப்படி இருக்கும் போது ஷூட்டிங்கிற்கு அவர்கள் வரவேண்டும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது என்று பி.வாசு கூறினார்.

இதையும் படிங்க : விஸ்வரூபம் எடுக்கும் அஜித், தனுஷ் படம்! கைவிடப்பட்ட நிலையில் தூசி தட்டி மறுஜென்மம் கொடுத்த நம்ம மில்லர்

ஆனால் தமிழ் குமரனிடம் ஒரு நாள் ‘சார் நான் தோள் மேல் கைபோடவும், என் தோள் மேல் கை போடவாவது ஒரு நாள் வரவேண்டும்’ என கூறினாராம். மேலும் ஒரு முறையாவது நல்லா பண்ணீங்க என்று தட்டிக் கொடுங்க என்றும் வாசு அவரிடம் சொன்னாராம். ஆனால் ஒரு தடவையாவது சுபாஸ்கரன் அவர் அன்பை கொடுத்தால் இத்தனை நாள் இதை மிஸ் பண்ணிட்டோமே என்று வருத்தப்படுவோம், அந்தளவுக்கு இறங்கி வந்து அன்பை பொழிவார் என்றும் வாசு கூறினார்.

அதற்கு உதாரணமாக சந்திரமுகி ஆடியோ வெளியீட்டு விழாவில் வழக்கம் போல் லாரன்ஸ் அவருடைய டிரஸ்ட்டில் இருந்து குழந்தைகளை அழைத்து வந்து நடனம் ஆட செய்தார். அதை பார்த்ததும் ஸ்பாட்டிலேயே சுபாஸ்கரன் ஒரு கோடியை தூக்கி கொடுத்து அந்த குழந்தைகளுடன் கீழே அமர்ந்து போஸும் கொடுத்தார். இதை பார்க்கும் போது என் கண்கள் எல்லாம் கலங்கின என்றும் வாசு கூறினார்.

Next Story