வாயை வச்சிக்கிட்டு சும்மா இருங்கனு சொன்னா கேட்டீங்களா? பார்த்திபனால் முடங்கி கிடக்கும் லைக்கா நிறுவனம்
தமிழ் சினிமாவில் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகிறது லைக்கா நிறுவனம். அந்த நிறுவனத்தின் தலைவராக சுபாஸ்கரன் இருக்கிறார். இவர் லண்டனில் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் ஹிந்தி படங்களின் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் லைக்கா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
2.0 மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற தமிழ் சினிமாக்களின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளது. இதன் தயாரிப்பில் முதன் முதலில் வெளிவந்த படம் கத்தி. விஜய் நடிப்பில் வெளியான அந்த படம் மிகப்பெரிய வெற்றி பதிவு செய்தது.
இதன் படிப்படியான வளர்ச்சியால் எக்காலத்திலும் மிகவும் விலை உயர்ந்த இந்திய தயாரிப்பு நிறுவனமாக லைக்கா நிறுவனம் கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லைக்கா நிறுவனத்தில் வருமான வரி துறையினர் திடீரென்று சோதனை நடத்தினார்கள்.
அந்த சோதனையில் பல ஆதாரங்கள் கிடைத்ததாகவும் லைக்கா நிறுவனத்தின் மொத்த வங்கி பணத்தையும் வருமானவரி துறையினர் முடக்கி விட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அதனாலயே லைக்கா நிறுவனத்தோடு தயாரிக்கப்பட்ட வரும் சில படங்களின் படப்பிடிப்புகள் கூட தாமதமாகி வருகின்றன.
இதற்கு ஆணி வேராக பார்த்திபன் ஒரு வீடியோவில் பேசியது இப்போது வைரலாகி வருகின்றது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பார்த்திபன் ஒரு கருத்தை கூறினார். அப்போது அவர் பேசும்போது வருமானவரித்துறையினர் ஒரு ஆயிரம் கோடி பணத்தை ரெய்டு செய்ய விரும்பினால் பொன்னியின் செல்வன் திரைப்படம் எங்கெல்லாம் திரையிடப்படுகின்றதோ அந்த திரையரங்கிற்கு போய் பாருங்கள். ஆயிரம் கோடியை எடுத்து விடலாம் என்று கூறியிருந்தார்.
அவர் அந்த படத்திற்கான பிரமோஷனுக்காக அப்படி சொல்லி இருந்தாலும் பிற்காலத்தில் அதுவே நிஜமாகிவிட்டது. இப்போது ஒட்டுமொத்தமாக லைக்கா நிறுவனம் முடங்கிப் போய் கிடைக்கின்றது. இதைக் குறிப்பிட்டு பேசிய பயில்வான் ரங்கநாதன் கூட" எந்த நேரத்தில் பார்த்திபன் இப்படி சொன்னாரோ லைக்கா நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலைமை ஆகிவிட்டது" என்று கூறினார்.
இதையும் படிங்க : எம்.ஜி.ஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. காலில் விழுந்து கதறிய அசோகன்…