தலைவர் 170 படத்தை கிடப்பில் போட்ட லைக்கா!.. ஜெயிலர் பேய் ஹிட் அடிச்சும் வீணாப் போச்சே!..

Published on: August 17, 2023
lycaa
---Advertisement---

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 80களுக்கு பின் முன்னணி ஹீரோவாக மாறி ஒரு கடத்தில் வசூல் மன்னனாகவும் மாறினார். எம்.ஜி.ஆரை போல ஆக்‌ஷன் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் இவர். ரஜினி என்ன செய்தாலும் அது ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் செய்திதான்.

பொதுவாக ரஜினியின் படங்கள் வெளியாகும் போது எந்த பிரச்சனையும் ஏற்படாது. ஆனால், பாபா படத்திலிருந்து அவரின் படங்களுக்கும் சிக்கல் என்பது துவங்கியது. அப்படம் நஷ்டத்தை ஏற்படுத்த வினியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தார் ரஜினி. லிங்காவிலும் இது தொடர்ந்தது. அதேநேரம் சிவாஜி, எந்திரன், 2.0, பேட்ட ஆகிய படங்கள் லாபத்தை கொடுத்தது. ஆனால், குசேலன், தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

இதையும் படிங்க: தளபதி 68-ல் தெறிக்கவிடும் விஜய்!.. இப்படி ஒரு டிவிஸ்ட்டா?!… செம ட்ரீட் இருக்கு..

எனவே, ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என முடிவெடுத்த ரஜினி நெல்சனுடன் கூட்டணி அமைத்தார். இத்தனைக்கும் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், நெல்சன் சொன்ன கதையில் நம்பிக்கை வைத்து ஜெயிலர் படத்தில் நடித்தார். இந்த படம் இப்போது சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

ஒரு வாரத்தில் இபப்டம் 375.40 கோடி வசூலை பெற்றுள்ளதாக இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வாரம் முடிய இன்னும் 4 நாட்கள் இருப்பதால் இப்படம் ரூ.450 கோடி வசூலை தாண்டும் என கணிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: ரஜினியை பார்த்து ‘தலைவா’ என்று கத்திய மூன்று வயது சிறுவன்! தனஞ்செயன் பெருமிதம் – சவுக்கடி கொடுத்த ப்ளூசட்டை மாறன்

ரஜினியின் அடுத்த படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜெயிலர் படத்தை முடித்த கையோடு இந்த படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் ரஜினி. ஆனால், நிதிநெருக்கடி காரணமாக இப்படத்தை உடனடியாக லைக்காவால் துவங்க முடியவில்லையாம். அதனால்தான் ரஜினி இமயமலைக்கு சென்றுவிட்டாராம்.

லைக்கா நிறுவனம் இப்போது லால் சலாம் மற்றும் அஜித்தின் விடாமுயற்சி ஆகிய படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜெயிலர் பட வசூல்!.. கமலை பெருமூச்சு விட வைத்த சன் பிக்சர்ஸ்!.. என்னமா உருட்டுனாய்ங்க!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.