Cinema History
சூர்யா படத்தில் நேர்ந்த சோகம்!.. ரோட்டுல நின்னு கதறி அழுத சினேகன்!.. கை கொடுத்த அமீர்..
தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கும் மேல் பாடல்களை எழுதி வருபவர் சினேகன். தஞ்சாவூரில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த இவருக்கு கவிதைகள் மேல் அதிக ஆர்வம் ஏற்பட்டு எழுதி தள்ளினார். அதன்பின் சென்னை வந்து சினிமா பாடல்களை எழுத வாய்ப்பு தேடினார். கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக சில வருடங்கள் வேலை செய்தார். அதன்பின் திரைப்படங்களில் பாடல்களை எழுத துவங்கினார்.
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியான சாமி படத்தில் இவர் எழுதிய ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதேநேரம், அதற்கும் எதிர்ப்பும் கிளம்பியது. அதன்பின் பல திரைப்படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறார். சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் 2500 பாடல்களை சினேகன் எழுதியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஓவரா பண்ணக்கூடாது!.. அமீர் மட்டும் நினைச்சிருந்தா!. ஞானவேல் ராஜாவை பொளந்துகட்டும் தயாரிப்பாளர்..
சேரன் இயக்கத்தில் உருவான பாண்டவர் பூமி படத்தில் சினேகன் எழுதிய ‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்’ பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்த பாடலாகும். அதேபோல், ஆட்டோகிராப், பேரழகன், மன்மதன், பருத்திவீரன், ஏகன், ஆடுகளம், கழுகு, யானை, தி லெஜண்ட், காபி வித் காதல் என பல படங்களில் பாடல்களை சினேகன் எழுதியுள்ளார். அதேபோல், பல தொலைக்கட்சி சீரியல்களுக்கும் பாடல்களை எழுதியிருக்கிறார்.
கடந்த சில நாட்களாக பருத்திவீரன் விவகாரம் சமூகவலைத்தளங்களில் அதிகம் பார்க்கப்படும் செய்தியாக இருக்கிறது. அமீரை திருடன் என்கிற ரேஞ்சுக்கு ஞானவேல் ராஜா பேச அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்து அவர் வருத்தம் தெரிவிக்கும் நிலைக்கு சென்றது. இந்த படத்தில் சினேகனும் பாடலை எழுதியிருக்கிறார். இவரும் அமீருக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகிறார்.
இதையும் படிங்க: வாடிவாசல் படத்திலிருந்து விலகும் அமீர்?.. இதற்கு பின்னால் இருக்கும் அந்த நடிகர்!…
மேலும், ஊடகம் ஒன்றில் பேசிய சினேகன் ‘நந்தா படத்தில் நான் ஒரு பாடலை எழுதியிருந்தேன். இளையராஜா பாட யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தின் டைட்டிலில் இந்த பாடல் வரும் என ஆசையாக இருந்தேன். அடிக்கடி பாலாவின் அலுவலகத்திற்கு போவேன். படம் முடியும் நிலையில் அந்த படத்தில் இணை இயக்குனராக வேலை செய்த அமீர் அண்ணன் என்னிடம் வந்து ‘நீங்கள் எழுதிய பாடல் இந்த படத்தில் இடம் பெறப்போவது இல்லை. ஏனெனில், கதை மாறிவிட்டது’ என கூறினார்.
இதனால் ஏமாற்றமடைந்த நான் வெளியே வந்து தெருவில் கதறி அழுதேன். அதைப்பார்த்த அமீர் ‘ஃபீல் பண்ணாதீங்க. நான் படம் எடுக்கும்போது என் படத்தில் உங்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்கிறேன்’ என சொன்னார். சொன்னது போலவே, மௌனம் பேசியது, பருத்திவீரன் ஆகிய படங்களில் எனக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தார் என சினேகன் பேசியிருந்தார். அதேபோல், அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்திலும் சினேகன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எனக்கே பிடிக்கல!.. கோபத்துல எடுத்த முடிவு அது!.. பல வருஷம் கழிச்சி வெளிப்படையாக சொன்ன அமீர்..