‘ஒரு தேவதை வந்துவிட்டாள்’ பாடலை எழுதிய கவிஞரின் தற்கொலை பின்னணி!.. பகீர் தகவல்!...
Ravishankar: தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் காதல் பாடல்கள், சோகப்பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் என எத்தனையோ வகையான பாடல்களை நாம் பார்த்திருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் தமிழ் இலக்கியத்தை கரைத்து குடித்தவர்களால் மட்டுமே பாடல் வரிகள் எழுத முடியும் என்ற இலக்கணத்தை மாற்றியமைத்த ஒருவரை பற்றித்தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
கவிஞர் கண்ணதாசன் தொடங்கி வைரமுத்து வரை அனைவரும் அவரது வரிகளில் இலக்கிய நடையையும் இலக்கண நடையையும் புகுத்தி பாடலுக்கு வரிகளை எழுதியவர்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமென்றாலும் பாடல் வரிகள் எழுதலாம் என்ற நிலைக்கு ஆளாகியிருக்கிறது தமிழ் சினிமா. பேச்சு வழக்கில் பேசப்படும் வார்த்தைகளை கொண்டு ஒரு பாடலை எழுதி அதுவும் ஹிட்டாகி விடுகின்றன.
இதையும் படிங்க: சூர்யாவுக்கு விருது நிச்சயம்!. ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுக்கும் கங்குவா டிரெய்லர் வீடியோ!…
அந்த வகையில் இவர் எழுதிய பெரும்பாலான பாடல்கள் காதலிக்காக உருகி உருகி எழுதிய பாடலாகவே இருக்கும். அவர் வேறு யாருமில்லை. சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட கவிஞரும் இயக்குனருமான ரவி சங்கர். இவர் இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக இருந்தவர். இவர் இயக்கிய முதலும் கடைசியுமான படம் ‘வருஷமெல்லாம் வசந்தம்’.
அந்தப் படத்தில் வரும் ‘அடி அன்னார்கழி’, ‘எங்கே அந்த வெண்ணிலா’, ‘முதன் முதலா உன்னை பார்க்கிறேன்’ என அத்தனை காதல் கீதங்களையும் இவரே தன் கையால் எழுதி மெகா ஹிட்டாக்கினார். அதுமட்டுமில்லாமல் சூர்யவம்சம் படத்தில் வரும் ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ தொடங்கி ‘சலக்கு சலக்கு ஜரிகை சேலை’ என காதலின் ஆழத்தையும் தாம்பத்ய உறவையும் அழகான வரிகளில் எழுதியவரும் ரவி சங்கர் தான்.
இதையும் படிங்க: நான் கைதட்டல் வாங்க அவங்க கஷ்டப்படணுமா? விஜயகாந்த் திடீர் முடிவெடுக்க காரணம் இதான்!…
மேலும் நீ வருவாய் என படத்தில் வரும் ‘பார்த்து பார்த்து கண்கள்’, ‘ஒரு தேவதை வந்து விட்டாள்’ பாடலும் இவர் எழுதிய பாடல்கள்தான். அதோடு விஜய் நடிப்பில் உருவான பிரியமுடன் படத்தில் வரும் ‘பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா’ பாடல் என பல இனிமையான காதல் கீதங்களை கொடுத்த ரவிசங்கர் இன்று நம்மிடம் இல்லை எனும் போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தன் வாழ்நாளில் ஒரே ஒரு படத்தை இயக்கியவர். 90களுக்கு பிறகு எந்தவொரு வாய்ப்பும் இல்லாமல் ஒரு வகை தோல் நோயால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில்தான் தங்கியிருந்திருக்கிறார். திருமணம் செய்யாமல் தனியாகவே வாழ்ந்து வந்த ரவிசங்கருக்கு ஒரு சகோதரியும் சகோதரரும் இருக்க அவர்கள் வெளி நாட்டில் செட்டிலாகியிருக்கின்றனர்.
வாடகை கொடுக்கக் கூட முடியாமல் இருந்த ரவிசங்கர் சில நாள்களாக அவரின் வீடு பூட்டியே கிடந்திருக்கிறது. அதன் பிறகு கதவை உடைத்து பார்த்த போது சீலிங்கில் உள்ள கொக்கியில் துணியால் தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. ஆனால் அவர் உடல் அழுகிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததாம். அருகில் அவர் எழுதிய ஒரு கடிதமும் இருக்க அந்த கடிதத்தில் நோய் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டேன் என அவர் அதில் எழுதியிருக்கிறார்.
இதையும் படிங்க: தங்கலானுக்கு வச்சிட்டாங்க ஆப்பு!.. கடைசி நேரத்துல இப்படியா?!.. ரிலீஸ் ஆகுமா?!….
கூடவே யாருக்கோ 10000 ரூபாய் கடனாக பெற்ற தொகையை ஜி பேயில் அனுப்பிவிட்டும் தற்கொலை செய்திருக்கிறார். மேலும் இன்னும் இரு தினங்களில் வீட்டை காலி செய்வதாக வீட்டு உரிமையாளரிடம் கூறியிருந்தாராம். அதனால் அவருடைய உடைமைகளை எல்லாம் பேக்கில் எடுத்துவைத்து விட்டுத்தான் இந்த உலகத்தை விட்டே போய்விட்டார் ரவிசங்கர்.