Lyricist Vaali: சினிமாவை பொறுத்தவரைக்கும் திரைக்கு பின்னாடி என்ன நடக்கும் என்பது முழுவதுமாக நமக்கு தெரிய வாய்ப்பில்லை. அப்படியே தெரிந்தாலும் அது சம்பந்தப்பட்ட நபர்களோ அல்லது அவர்களை சார்ந்தவர்களோ சொல்லித்தான் நமக்கு தெரியவரும்.
அப்படி ஏகப்பட்ட விஷயங்களை கவிஞர் வாலி தனது பேட்டியின் மூலமாகவும் தான் எழுதிய கட்டுரைகள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறார். கண்ணதாசனுக்கு பிறகு ஒட்டுமொத்த சினிமாவும் நம்பிக் கொண்டிருந்த ஒரு கவிஞராக வாலி விளங்கினார்.
இதையும் படிங்க: ஒண்ணு இல்ல.. ரெண்டு இல்ல… கேப்டன் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்கள் எத்தனைன்னு தெரியுமா?…
எம்ஜிஆர் முதல் இன்றைய தலைமுறைகள் வரை அனைத்து நடிகர்களுக்காக பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். அதனாலேயே அவர் வாலிபக் கவிஞர் என்றும் அழைக்கப்பட்டார்.ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப தன் கவிதையை புதுமைப்படுத்தினார் வாலி.
ரஜினி மற்றும் மீனா நடிப்பில் மிகவும் பிரபலமான திரைப்படம் என்றால் எஜமான். அந்தப் படத்தில் எல்லா பாடல்களையும் வாலிதான் எழுதிக் கொடுத்தாராம். ஆனால் ராக்கு முத்து ராக்கு பாடலுக்கு மட்டும் அவர் பெயரினை டைட்டில் கார்டில் போட்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: தங்கலான் முதல் தளபதி 68 வரை!.. வரிசை கட்டி நிற்கும் படங்கள்!. ரிலீஸ் எப்போது தெரியுமா?..
அதற்கு பின்னணியில் இருக்கும் காரணத்தை வாலியே ஒரு பேட்டியில் கூறினார். எஜமான் படத்தில் ஆர்.வி உதயக்குமார் தான் பாடல்களை எழுதினாராம். ஆனால் இளையராஜா வாலியிடம் வந்து இந்தப் பாடல்களை பார்த்து எதாவது திருத்தம் இருந்தால் சொல்லுங்கள் என்று கொடுத்தாராம்.
உடனே வாலி உதயகுமார் எழுதிய பாடல்களில் எங்கு எங்கு கவி நயம் வேண்டுமோ அதற்கேற்ற வகையில் சொருகி கொடுத்திருக்கிறார். இதை குறிப்பிட்டு பேசிய வாலி ‘எஜமான் படத்தில் சொல்லப்போனால் எல்லா பாடல்களையும் நான் தான் எழுதினேன். என் பெயரை டைட்டில் கார்டில் போட வேண்டும் என்பதற்காக தனியாக ஒரு பாடலை எழுதிக் கொடுங்கள் என்று கேட்டனர். அதன் பிறகே ராக்கு முத்து ராக்கு பாடலை எழுதிக் கொடுத்தேன். அதில் என் பெயர் போடப்பட்டது’ என்று அந்த பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க: சும்மாவே சூடேறும்!.. சமந்தா இப்படி சட்டையை கழட்டின சார பாம்பா வந்து நின்னா என்னாகும்?..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…