Connect with us
M.R.Ratha

Cinema History

அப்ப சொன்னது இப்பவும் பொருந்தும்!.. எம்.ஆர்.ராதா-வின் எவர் கிரீன் நச் வசனங்கள்…

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை தனது ஏற்ற, இறக்க குரல் மூலம் பெற்று பலரையும் மகிழ்வித்த நடிகவேள் எம் ஆர் ராதா தனது திரைப்படங்களில் மக்களுக்கு உண்மையை எடுத்து உரைத்ததில் உத்தமராக இருந்திருக்கிறார்.

எதார்த்தமான நிலையை மக்கள் அறிந்து கொள்ள பக்குவமாக பேசிய வசனங்கள் இன்று அளவு நிலைத்து நிற்க கூடியதாகவும், மக்களை சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது. திரைப்படங்களில் இவர் கெட்டவராக நடித்திருந்தாலும் உண்மையில் ஒரு நல்ல மனிதர்.

M.R.Ratha

M.R.Ratha

முக்காலத்திற்கும் பொருந்தும் உண்மைகளை வசனமாக தந்த எம் ஆர் ராதா பேசிய வசனத்தில் சில வசனங்களை பற்றி பார்க்கலாம். அந்த வகையில் இவர் பேசிய வசனங்களில் ஒன்று தான் எவன் ஆண்டாலும்.. கடவுளே ஆண்டாளும்.. உழைத்து தான் சாப்பிடணும். எவனும் வாயில வந்து ஊட்ட மாட்டான்.

இப்படிப்பட்ட வசனம் இன்று எந்த அளவு பொருந்தும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் போதும். மேலும் ஒவ்வொரு தமிழனும் தன்னை பற்றி மட்டம் தட்டிக் கொள்ளக்கூடிய நிலையில் உள்ளவன் என்பதை தெளிவாக இந்த வசனத்தில் கூறியிருப்பார். அந்த வசனம் என்னவெனில் ‘தமிழன் எப்போதும் வெளிநாட்டை பற்றி தான் உயர்வாக பேசுவான்’ என்பது தான்.

இதையும் படிங்க: ஆசைக்கு ஒரு மகன்.. ஆஸ்திக்கு ஒரு மகனாக வாழ்ந்த அரவிந்த்சாமி! அட இவருக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியமா?

மேலும்  ஒழுக்கத்தை எப்படி ஃபாலோ பண்ண வேண்டும் நகைச்சுவையாக ஒரு வசனத்தில் பேசி இருப்பார். அப்படி அவர் பேசிய வசனம் தான் ‘கோயிலுக்கு போனா சாமியை கும்பிட்டு வெளியே வந்துடுங்க. அங்கேயே உட்கார்ந்து குடும்பம் நடத்தாதீங்க’. இன்றளவும் நடக்கக்கூடிய உண்மையான விஷயத்தை எந்த அளவு தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறார் பாருங்கள்.

M.R.Ratha

M.R.Ratha

எந்த விஷயத்தையும்புட்டு, புட்டு வைக்க தயங்காத எம் ஆர் ராதா கடவுளைப் பற்றி கூறுகையில்  ‘அன்பே சிவம்ன்னு சொல்றாங்க சிவன் கையில பார்த்தால் சூலம்.. ஆயுதம்! காலையில் எழுந்ததும் பின்னால போய் உட்காருவான்.. கடவுளேன்னு உட்காருவான்.. கடவுளேன்னு கூப்பிடுற இடமா அது’ என்ற பகுத்தறிவு வசனங்களை பக்காவாக பேசியவர்.

இதுபோலவே ‘பொய் பேசுவதையே தொழிலாக கொண்டு தனது வழக்குகளை ஜெயித்த வக்கீல் நீதிபதியானால் எப்படி உண்மையைப் பேசுவார்?’ என்ற கேள்விகளை கேட்டு மக்களை சிந்திக்க வைத்தவர்.

இவரைப் போல என்று எந்த ஒரு நடிகரும் இப்படிப்பட்ட வசனங்களை பேசி இருக்கிறார்களா இன்று கேட்டால் ஒரு நீண்ட தேடலை தான் தேட வேண்டி இருக்கும்.

இதையும் படிங்க: நல்ல வேலை நடிகர் சித்தார்த்கிட்ட மாட்டல! மாட்டி இருந்தா நடிகையர் திலகம் நிலைமைதான்..!”

google news
Continue Reading

More in Cinema History

To Top