More
Categories: Cinema News latest news

இப்படி ஆகிப்போச்சே!…தலையில் மேல் கை வைத்த சிம்பு ரசிகர்கள்…

வெங்கட் பிரபு எழுதி இயக்கியுள்ள அதிரடி அரசியல் திரைப்படமாக மாநாடு உருவாகிறது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். படத்தில் சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் எஸ். ஜே. சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் அதிரடி காட்சிகளுடன் மிரட்டலாக இருந்தது. எனவே படத்தின் மீதான ரசிகர்களின் பார்வை அதிகரித்துவிட்டது. இதில் எஸ். ஏ. சந்திரசேகர் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அப்துல் காலிக் எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.

Advertising
Advertising

மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது. அண்ணாத்த படம் வெளியாகும் போது தேவையில்லாமல் எதற்கு சர்ச்சை என படக்குழு என நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை.

இந்த செய்தி சிம்பு ரசிகரக்ளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts