Connect with us

Cinema News

மாநாடு ஃப்ளைட் சீன்னில் நடந்த குளறுபடிகள்… சிம்புவை போட்டு படுத்திய வெங்கட்பிரபு

Maanadu: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் முக்கிய காட்சியாக அமைந்தது ப்ளைட் சீன்தான். ஆனால் அதை எடுக்க இரண்டு நாட்கள் மட்டுமே டைம் கொடுக்கப்பட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்து இருக்கிறார்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் நடிகர் சிம்பு, கல்யாணி, பிரேம்ஜி, எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா, ஒய்  ஜி மகேந்திரன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான டைம் லுப் என்னும் கதையை அடிப்படையாக அமைந்தது.

இதையும் படிங்க:தளபதி விஜய்க்குப் பிடிச்ச தல படம்… மட்ட சாங் முதல்ல பாட்டாவே இல்லையாம்..!

நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் பல வருடம் கழித்து வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வைரல் ஹிட் அடித்தது. இப்படத்தில் மிக முக்கிய காட்சியாக அமைந்தது விமானத்தில் சிலம்பரசன் இறந்தபின் கண் விழிப்பதுபோல அமைந்திருந்த காட்சிகள் தான்.

படத்தில் விமானத்தின் காட்சிகள் தான் அதிகமாக இடம்பெற்றிருக்கும். ஆனால் இதை சூட் செய்து கொள்ள வெங்கட் பிரபுவுக்கு இரண்டே நாட்கள் மட்டுமே நேரம் கொடுக்கப்பட்டதாம். ஓசூரில் உள்ள ஒரு விமான நிலையத்தில் அவர்களுடைய விமானம் நிறுத்தப்பட்டிருந்தது.

maanadu

கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நாட்களில் முதல் நாள் காலை படத்தின் மொத்த குழுவும் அங்கு சென்று சேர்ந்தனர். தேவைப்பட்ட லைட் மற்ற செட்களை எல்லாம் வைத்து ஷூட்டிங் ஆரம்பிக்கும் சமயத்தில் இங்கு படத்தை எடுக்கக் கூடாது என பிரச்சனை தொடங்கியது.

இதையும் படிங்க: ராமமூர்த்தி இறுதி அஞ்சலி… ரோட்டில் முத்து-மீனா சண்டை.. சிக்கிய தங்கமயில்…

ஏனெனில் வெளியில் ஒரு விமானம் கிளம்ப தயாராக இருந்ததாம். வெளியில் எடுக்க மாட்டோம். விமானத்திற்கு உள்ளே சூட் செய்து கொள்கிறோம் என வெங்கட் பிரபு கேட்டும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இதை தொடர்ந்து விமானத்தை எடுத்துச் சென்று இன்னொரு இடத்தில் நிறுத்தி மற்றொரு பொருட்களை அங்கு கொண்டு வந்து சேர்க்கவே அரை நாள் முடிந்துவிட்டது.

தொடர்ந்து தேவைப்பட்ட காட்சிகளை ஒன்றரை நாட்களில் எடுத்து முடித்திருக்கின்றனர். அதிலும் கல்யாணி பக்கத்திலிருந்து சில காட்சிகளை எடுப்பதற்காக நள்ளிரவில் மீண்டும் சிம்புவை வைத்து ஷூட் செய்ததாக கூறப்படுகிறது. சிம்புவை கேரவன் கூட அனுப்பாமல் தரையிலேயே உட்கார வைத்து மொத்த படத்தின் காட்சிகளையும் அங்கு தேவைப்படுபவைகளை எடுத்து முடித்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top