மாநாடு படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

by adminram |   ( Updated:2021-09-27 15:43:55  )
maanadu
X

உறவை காத்த கிளி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 10க்கும் மேற்பட்ட படங்களில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக நடித்து அதன்பின் 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சிம்பு. அதன்பின் பல படங்களில் இளமை துள்ளலான நடிப்பில் கலக்கினார்.

2010ல் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. எத்தனை நாளைக்குத்தான் லிட்டில் சூப்பர் ஸ்டாராகவே இருப்பீர்கள் என்று சிம்புவை யங் சூப்பர் ஸ்டாராக மாற்றினார் கெளதம்.

சாக்லேட் பாயாக இருக்கும் சிம்புவிற்கு பெண்கள் மத்தியில் மவுசு அதிகம். அப்படித்தான் வல்லவன் படத்தில் நடிக்கும்போது நயன்தாராவை காதலித்தார். ஆனால், இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இடையில் பிரிந்தனர். பின்னர் 'வாலு' படத்தில் நடித்தபோது ஹன்ஷிகாவை காதலித்தார்.

maandau-01

maanadu movie

ஆனால் இந்தக் காதலும் கல்யாணம் வரை செல்லவில்லை. அதன்பின் திடீரென ஆன்மீகத்தில் இறங்கினார். இதற்கிடையே இவர் ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வருவதில்லை என்ற பிரச்னை வேறு. ஒருவழியாக எல்லா பிரச்சனைகளையும் முடித்து தற்போது மளமளவென பல படங்களில் நடித்து வருகிறார்.

மஹா, மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இதில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, படம் நவம்பர் 4ல் தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அக்டோபர் 2ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் ரசிகர்கள் இந்த செய்தியை கொண்டாடி வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் கல்யாணி பிரியதர்சன் நாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story