ப்ளீஸ் இனிமே அப்படி கூப்பிடாதீங்க.. வாய்ப்புக்காக நொந்து போன இளம் நடிகை...

by Manikandan |
ப்ளீஸ் இனிமே அப்படி கூப்பிடாதீங்க.. வாய்ப்புக்காக நொந்து போன இளம் நடிகை...
X

விண்ணை தாண்டி வருவாயா உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்து அதன் பின்னர் பாலா இயக்கத்தில் உருவான அவன் இவன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் ஜனனி.

janani_main_cine

இவர் அதன் பின்னர் நடித்த தெகிடி, அதே கண்கள், கூர்மன் ஆகிய படங்கள் ரசிகர்கள் மனதில் நின்றவை. தற்போது அவர் வேழம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றுள்ளது. அதில் பேசிய ஜனனி, ப்ளீஸ் என்னை ஜனனி ஐயர் என கூப்பிடாதீர்கள். என கூறினாராம். ஒருவேளை பின்னால் அவர் சார்ந்த சமுதாயத்தின் பெயர் வருவதால் பட வாய்ப்புகள் குறைவாக வருவதாக அவர் கருதுகிறாராம். அதனால் தான் தன் பெயரை ஜனனி என மட்டுமே கூறுங்கள் என கோரிக்கை வைத்துள்ளாராம்.

இதையும் படியுங்களேன் - விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கொடுத்திருங்க.. பிரமாண்ட இயக்குனரை மிரள வைத்த மக்கள் செல்வன்.!

janani aiyer

அதே போல அவரது பெயர் விக்கிபீடியாவிலும் அவரது பெயருக்கு பின்னால் இருந்த ஐயர் எனும் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதே போல, அமிர்தா ஐயர், க்ரித்தி ஷெட்டி, அனுஷ்கா ஷர்மா , காஜல் அகர்வால், சோனியா அகர்வால் போன்றோரும் இதே போல தனது பின்னால் வரும் அந்த ஜாதிய அடையாளத்தை எடுத்தால் நன்றாக தான் இருக்கும்.

Next Story