More
Categories: Cinema History Cinema News latest news

பிரியாணி படத்தில் பாம் பாம் பெண்ணே பாடல் கேட்டு இருக்கீங்களா? அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவின் உயிர் மூச்சு பாடல்கள் தான். அதிலும் சில கவிஞர்களுக்கு தான் அசைக்க முடியாத ஒரு இடம் சினிமாவில் கிடைக்கும் அப்படி ஒருவர் தான் மதன் கார்க்கி. தனக்கென அடையாளத்தினை எளிதாக அவர் உருவாக்கிவிடவில்லை. அதற்கு அவர்பட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகளும் ஏராளம். அதிலும் ஒவ்வொரு பாட்டுக்கு வித்தியாச பாணியை கையாள ஆசைபடுவாராம்.

karthick -hansika

மதன் கார்க்கி சினிமாவில் வாய்ப்பு தேடி அழைந்த சமயத்தில் யாருடமும் தான் வைரமுத்துவின் மகன் என்பதை சொல்லவே மாட்டாராம். ஏன் ஷங்கர் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது கூட அவரிடம் இருந்த தொழில்நுட்ப அறிவுக்கு தான் என்கிறது கோலிவுட் வட்டாரம். அதுபோல வைரமுத்துவிடம் தனது பாட்டு எழுதும் ஆசையை சொன்ன போது அவருக்கு இது பிடிக்கவில்லையாம்.

Advertising
Advertising

இதனால் அவருக்கு தெரியாமலே சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து வந்தார். அப்போது யுவன் ஷங்கர் ராஜாவின் அலுவலகத்திற்கு தான் யார் என்று சொல்லாமலே வாய்ப்புக்காக சென்று இருக்கிறார். ஆனால் அங்கிருந்தவர்கள் இவரை எளிதாக அடையாளம் கண்டிக்கொண்டு விட்டனர். இதை தொடர்ந்து, யுவனும் கண்டிப்பாக ஒரு படம் செய்யலாம் என நம்பிக்கை கொடுத்து அனுப்பினராம்.

சில மாதங்கள் கழித்து வெங்கட் பிரபு என்னுடைய பிரியாணி படத்துக்கு நீங்கள் பாட்டு எழுத வேண்டும். யுவன் பிரியப்படுகிறார் எனக் கேட்டாராம். உடனே ஓகே சொல்லி மதன் கார்க்கி எழுதிய பாடல் தான் பாம் பாம் பெண்ணே. இப்பாடலில் ஒரு வரியில் பொன்மாலை ஒன்று மீண்டும் உண்டானதே, ஏதேதோ எண்ணம் எல்லாம் மீண்டும் பூக்கின்றதே என எழுதி இருப்பாரு. அதில் ஒரு விஷயம் இருந்ததாம்.

yuvan-karky

யுவனின் தந்தையும், இசையமைப்பாளருமான இளையராஜா, மதனின் தந்தையும், கவிஞருமான வைரமுத்து இணைந்து எழுதிய முதல் பாட்டு ‘பொன்மாலை பொழுது’, கடைசி பாட்டு ‘ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்’. இதை இணைத்து யுவன் – மதன் இணைந்த முதல் பாடலில் பயன்படுத்தி இருப்பார்.

Published by
Akhilan

Recent Posts