முதல் படம் ரிலீஸாகும் முன்பே மதுரையில் ரசிகர் மன்றம்… விஜயகாந்துன்னா சும்மாவா?

vijayakanth
Vijayakanth: தமிழ்த்திரை உலகில் கருப்பு எம்ஜிஆர் என்று அனைத்து தரப்பினராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் கேப்டன் விஜயகாந்த். அவர் மறைந்தாலும் அவரது புகழை அனுதினமும் ரசிகர்கள் மீடியாக்களில் சொல்லிக்கொண்டே தான் இருக்கின்றனர். அப்படி ஒரு ரசிகர் சொன்ன நெகிழ்ச்சியான தகவல் தான் இது.
1978ல் நான் பெட்டிக்கடை தான் வச்சிருந்தேன். அவர் நடிகரா வரல. நண்பரா வந்தாரு. சினிமாவுல நடிக்கப் போறேன். சென்னையில ஸ்டில் கேட்டுருக்காங்க. தெரிஞ்ச ஸ்டூடியோ இருந்தா சொல்லுங்கன்னாரு. பக்கத்துல ராசியான ஸ்டூடியோ இருக்கு. பேரும் ராசி தான். அங்கே போய் எடுக்கலாம்னு சொன்னேன். அவரைப் பார்த்த உடனே நடிகராவாருன்னு எல்லாம் பார்க்கல.

நல்ல மனிதர் நம்மளைத் தேடி வந்துருக்காரு. ஆனா எதிர்காலத்துல நல்லா வருவாருன்னு என் மனசுல பட்டுச்சு. அவருக்கு மன்றம் வச்சிருக்கேன்னு இன்னைக்கு இங்கே வந்து பார்க்குறப்ப எனக்கு கொடுத்து வச்சிருக்கு என்கிறார் அந்தப் பெட்டிக்கடைக்காரர். அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்தத் தகவல்களை வழங்கினார். மேலும் என்ன சொல்றாருன்னு பாருங்க.
ஸ்டில் எடுத்து 20 ஸ்டில் பல ஸ்டைல்ல கேட்டாங்க… 79ல பட வாய்ப்பு கிடைச்சது. நாங்க 78லயே மன்றம் வச்சிட்டோம். படம் 100 நாள் ஓடுனா தான் ரசிகர்கள் மதுரையில மன்றம் வைப்பாங்க. ஆனா அவரைப் பார்த்த உடனே மன்றம் வைக்கணும்னு தோணுச்சு. இனிக்கும் இளமை படம் வந்ததும் 2 மன்றம் வச்சோம். மதுரைக்காரனை விடக்கூடாதுடான்னு பட்டி தொட்டி எங்கும் மன்றம் வச்சோம்.
பல பட வாய்ப்புகள் வந்தது. 80ல எனக்கு கல்யாணம் நடத்தி வச்சாரு. 90ல அவரு கல்யாணத்தை சிறப்பா மாநாடு மாதிரி நடத்துனோம். அப்புறம் என் மகள் கல்யாணத்தை அவரு நடத்தி வச்சாரு. 25 பவுன் நகை போட்டாரு. அவரே தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வச்சாரு. அடுத்து 3 வருஷம் கழிச்சி கல்யாணம் வச்சிருக்கேன்னாரு. எதுக்கு முடிஞ்சிட்டுல்லன்னாரு. அப்புறம் 2வது பிள்ளைன்னு சொன்னதும் அதுக்கும் 25 பவுன் நகை போட்டு கல்யாணம் பண்ணி வச்சாரு.

இதுல என் புள்ளைக்கு மட்டுமல்ல. யாரு என்னன்னுலாம் பார்க்க மாட்டாரு. கஷ்டப்பட்ட பிள்ளைகளுக்கு எத்தனையோ பேருக்கு மனு கொடுப்போம். கல்யாணம் பண்ணி வச்சிருக்காரு. எத்தனையோ பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகங்கள், படிப்புக்காக உதவித்தொகைன்னு கொடுத்துருக்காரு. வருஷத்துக்கு 200 பேருக்குக் கொடுத்துருக்கோம். இது மதுரை மாவட்டத்துக்கு மட்டுமல்ல. தமிழ்நாடு முழுவதும் கொடுத்துருக்கோம் என்கிறார் அந்தப் பெட்டிக்கடைக்காரர்.
இதற்கான வீடியோ லிங்கைக் காண…
https://www.facebook.com/watch/?v=2122588314827076&rdid=DFADIEEDo6JShvYJ