4 ஆண்டுகள்.. 1000 கோடியில் பட்ஜெட் படம்.. பிரம்மாண்டமாக தயாராகும் மகாபாரதம்?..!

Rajamouli
இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ராஜ்மௌலி. பாகுபலி என்றாலே இவரது பெயர் தான் நம் நினைவுக்கு வரும். சிற்பம் போல ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருப்பார்.
இவரது படங்கள் எல்லாமே செம ஹிட். இவரது படங்கள் அனைத்தும் பிரம்மாண்டமானவை. பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். படங்கள் இதற்கு உதாரணம். தற்போது பல படங்கள் எடுத்து வருகிறார். அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்க்கலாம்.
எஸ்எஸ்எம்பி 29. 800 கோடி பட்ஜெட். ஜங்கிள் அட்வென்சர். முதன்முறையாக காடு பற்றி எடுக்கப் போறாரு. ஆப்பிரிக்கா காடுகளில் சூட்டிங் நடந்து வருகிறது. இந்தப்படத்திற்காக மகேஷ் பாபு உடம்பை வருத்தி உயிரைக் கொடுத்து நடிச்சிக்கிட்டு இருக்காரு.
இந்தப்படத்திற்கு கதாநாயகி ஆலியாபட். இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் கீரவாணி. இந்தப்படத்தின் கதை விஜயேந்திரபிரசாத். இவர் ராஜமௌலியின் அப்பா. 2024 பொங்கலுக்கு வர வாய்ப்புள்ளது.
மகாபாரதம்

Mahabharata Movie
இந்தியில் மிகப்பெரிய ஹீரோ அமீர்கான். இவரை வைத்து எடுக்கப்போகிறார் ராஜமௌலி. இருவருக்கும் இது கனவுப்படம். இப்போ அமீர்கான் ராஜமௌலிக்கிட்ட பேசி இந்தப் படத்துக்கான வேலையை ஆரம்பிச்சிட்டாங்க. இந்தப்படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
அமீர்கான், பிரபாஸ், ரஜினிகாந்த், கமல், அமிதாப்பச்சன், ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோனே, ஆலியாபட் இப்படி பல பேரு இந்தப் படத்தில் நடிக்கப் போறாங்களாம். இந்தப்படத்தோட பட்ஜெட் ரூ.1000 கோடியாம். இந்தப் படம் கிட்டத்தட்ட 4 வருஷம் சூட்டிங் நடக்கப் போகுது என்றும் சொல்லப்படுகிறது.
அமீர்கான் கிருஷ்ணராகவும், பிரபாஸ் பீமாவாகவும், ஹிருத்திக் ரோஷன் கர்ணாவாகவும், பர்கான் அக்தர் அர்ஜூனாகவும் நடிக்க உள்ளனர்.
3 பாகங்களாகத் தயாராகப் போகிறது. இந்தப் படம் ரிலீஸானால் கண்டிப்பாக அவதார் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துவிடும்.
இந்தப்படம் வெளியானால் ராஜமௌலி உலகம் முழுவதும் மாஸான இயக்குனராகி விடுவார். இந்தப்படத்தை இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஆர்ஆர்ஆர் 2

RRR2
மகாபாரதம் முடிந்ததும் ராஜமௌலி எடுக்க உள்ள படம்.
கமல், ராஜமௌலி, லோகேஷ் கனகராஜ், பிருத்விராஜ் இவங்கள்லாம் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் ராஜமௌலி ஆர்ஆர்ஆர் 2 க்கான ஐடியா எனக்குக் கிடைச்சிருச்சு.
அந்தப்படத்தோட கதையை சீக்கிரமா நான் எடுக்கப்போறேன்னு சொல்லிருக்காரு. கடந்த ஆண்டு ஆர்ஆர்ஆர் படம் பிரம்மாண்டமா வெளியாகி வசூல் சாதனையை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

Rajni and Rajamouli
அல்லு அர்ஜூன், ரஜினிகாந்த், அஜீத் இவர்களுடன் ராஜமௌலி கைகோர்க்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தக்கூட்டணியின் வெற்றி அரங்கேறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.