தளபதி படத்தில் அறிமுகமாகும் மகேஷ் பாபுவின் மகள்.... வெளியான மாஸ் அப்டேட்....
சமீபகாலமாகவே இந்திய திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அது தளபதி விஜய்யின் 66 வது படம் தான். காரணம் விஜய் முதல் முறையாக தமிழ் படம் அல்லாமல் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதே. அவருடைய 29 ஆண்டுகால திரை வரலாற்றில் இது ஒரு புதிய திருப்பம் என்றும் கூறலாம்.
தற்போது விஜய் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. அடுத்தாண்டு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்குள் தளபதி 66 படம் டிரெண்டாக தொடங்கி விட்டது.
இதையும் படிங்க: இந்த குடும்பத்துக்கும் முதல் திருமணத்திற்கும் ராசியே இல்லை.. எல்லாமே டைவர்ஸ் தான்!!
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள புதிய படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாக உள்ளது. இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாள் முதல் தற்போது வரை ஏதேனும் அப்டேட் வெளியாகி கொண்டே உள்ளது.
முன்னதாக இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிக்க இருப்பதாகவும், நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த மேலும் ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி தளபதி 66 படத்தில் நடிகர் விஜய் பெண் குழந்தைக்கு தந்தையாக நடிக்க உள்ளதாகவும், விஜய்க்கு மகளாக பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் நடிக்க உள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.