ஒரு கைதியின் டைரி படம் உருவானது எப்படின்னு தெரியுமா? குருவின் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை என நிரூபித்த சிஷ்யன்
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் தலையாய சீடர் கே.பாக்யராஜ் என்பது நமக்குத் தெரிந்த விஷயம். ஆரம்ப நாட்களில் பாக்யராஜூக்கு அந்த அளவு அந்தஸ்து கிடைக்காவிட்டாலும் அடுத்தடுத்தப் படங்களில் அவரது திறமையைக் கண்டு வியந்த பாரதிராஜா ஒரு கட்டத்தில் அவரையே கதை பண்ண சொன்ன சம்பவமும் நடந்துள்ளது. அந்த சுவாரசியமான விஷயம் பற்றிப் பார்க்கலாம். வாங்க.
பாக்யராஜ் தனது திரைப்படத்தில் இடம்பெறும் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இருப்பார். கதையையும், கேரக்டர்களையும் ரசிகர்கள் மனதில் பதியச் செய்வது அவருக்கே உரித்தான தனித்துவமான கலை.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை ஆகியவை மட்டுமின்றி அந்தப் படத்தின் நாயகனாகவும், வலம் வந்து தமிழ்த்திரை உலகின் தனித்துவமான ஒரு இடத்தைப் பிடித்தவர் பாக்யராஜ்.
பாக்யராஜின் இயக்கத்தில் மிகச்சிறந்த படம் 1986ல் வெளியான ஆக்ரி ரஸ்தா என்ற இந்திப்படம் தான்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல் நடித்த சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கு கதை வசனம் எழுதியவர் பாக்யராஜ். ஆனால் திரையில் பாக்யராஜின் பெயர் இடம்பெறவில்லை.
கமலை வைத்து பாரதிராஜா இயக்கிய டாப் டக்கர் படம் இயக்கிக் கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் படமானது பாரதிராஜாவுக்கே திருப்தியாக இல்லை. 20 நாள்களில் சூட்டிங் நிறுத்தப்பட்டது. உடனே பாக்யராஜை அழைத்து படத்தைப் போட்டுக் காட்டினார்.
அதைப் பார்த்ததும் அவருக்கும் திருப்தி இல்லை. உடனே இயக்குனர் இமயம் பாக்யராஜிடம், ஒரு கதை ரெடி பண்ணு ராஜூ. கமல் கால்ஷீட் வேஸ்ட் ஆகக்கூடாது என்று சொன்னார்.
பாரதிராஜாவே இப்படி சொன்னதும் பாக்யராஜூக்குள் மின்னல் அடித்தது. நான்கே நாளில் கதை ரெடி பண்ணினார். அதுதான் ஒரு கதையின் டைரி. பாரதிராஜா இயக்கிய இந்தப் படம் தான் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
பட்டி தொட்டி எங்கும் டாப் டக்கராக ஓடி ரசிகர்கள் மத்தியில் கமலை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டியது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் ஸ்டோரி என்பதால் காட்சிகள் அனைத்தும் படு வேகமாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்து இருந்தன. இதுவே படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
1985ல் வெளியான இந்தப் படத்தில் கமல் தந்தை, மகன் என்ற இரு கேரக்டர்களில் நடித்து அசத்தியிருப்பார். மலேசியாவாசுதேவன் வில்லனாக வந்து ரசிகர்களைக் கவர்ந்திருப்பார். ரேவதி, ஜனகராஜ் உள்பட பலரும் நடித்துள்ளனர்.
இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். பாடல்களும் செம மாஸ். ஏபிசி நீ வாசி, பொன் மானே ஆகிய பாடல்கள் அந்தக் காலத்திருவிழாக்கள் மற்றும் கல்யாண வீடுகளில் எங்கு பார்த்தாலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.