இளையராஜாவுக்காகக் காத்திருந்த அப்பா உசுரு… மலேசியா வாசுதேவனின் மகள் நெகிழ்ச்சி தகவல்!

ilaiyaraja, mvd
இசைஞானி இளையராஜா தமிழ் சினிமா உலகின் பொக்கிஷம். அவரது பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் காதில் தேனாக வந்து பாயும். அவரது இசையில் பாடிய அத்தனைப் பாடகர்களுமே கொடுத்து வைத்தவர்கள். பெரிய பிரபலங்கள் ஆனார்கள். அப்படி ஒருவர் தான் மலேசியா வாசுதேவன். 16 வயதினிலே படத்தில் எஸ்பிபி பாட வேண்டிய ஒரு பாடல். அவருக்குத் தொண்டை கட்டியதால் பாட முடியவில்லை.
அதை மலேசியா வாசுதேவன் பாடுவதற்கு அனுமதித்து வாய்ப்பு கொடுத்தது இளையராஜாதான். முதல் பாடலிலேயே தனி முத்திரையைப் பதித்தார். அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அந்தப் பாடல் தான் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு. கிண்டல், கேலி, எகத்தாளம் என பல மாயாஜாலங்களை அந்தப் பாடலில் தன் வசீகரக் குரலால் நிகழ்த்திக் காட்டி இருந்தார் மலேசியா வாசுதேவன்.
படங்களில் வில்லனாகவும் நடித்து அசத்தியுள்ளார். இவரது பாடல்களில் கொண்டாட்டங்கள், சோகங்கள் என பல வகைகள் இருக்கும். ஆனால் அத்தனையும் சூப்பர்ஹிட் தான். அவருடைய கடைசி நிமிடம் குறித்து மகள் ஒரு நெகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.
அப்பாவுக்கு ராஜா சார் மீது இருந்தது மரியாதை கலந்த ஒரு நட்பு. ராஜா சார் இல்லை என்றால் நான் இல்லை என்று எப்பவுமே சொல்வாரு. இறந்து போன அந்தத் தருணத்தில் கூட அப்பாவோட உயிர் ராஜா சார் வருகைக்காக காத்திருந்த மாதிரி இருந்தது. கடைசி சமயத்துல ராஜா சார் வந்த உடனே தான் அவர் உயிர் பிரிந்தது.
நண்பர்கள் என்றால் அடிக்கடி பார்த்துக் கொள்வார்கள். வெளியே போவார்கள். அப்படி எல்லாம் இல்லை. இவங்க நட்பு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அடிக்கடி தொடர்பு இருக்குற நட்பு கிடையாது. மனசுக்குள்ள பேசிப்பாங்கன்னு சொல்வாங்க இல்லையா. அதுதான் என்கிறார் மலேசியா வாசுதேவனின் மகள் பிரசாந்தினி வாசுதேவன்.