மலேசியா வாசுதேவனைப் பாடகராக.. நடிகராக மாற்றியது இவர்களா? என்னப்பா சொல்றீங்க?

malasiya vasudevan
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாடகர்கள் மனோவும், மலேசியாவாசுதேவனும் கலந்துரையாடினார்கள். அப்போது இருவரும் தங்களது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்தனர். அவற்றில் இருந்து சிலவற்றைப் பார்ப்போம்.
கல்யாணராமன் படத்தில் 'ஆகா வந்திருச்சு' என்ற பாடலை மலேசியாவாசுதேவன் குரலை மாற்றி பாடியிருப்பார். செம மாஸாக இருக்கும். படத்தில் கமல் எப்படி பேசுவார் என்று போட்டுக் காட்டப்பட்டதாம். அந்த வாய்ஸின் சாயலில் பாட வேண்டும் என்றதும் அவர் பாடிய பாடல்தான் ஆகா வந்திருச்சு. அதே போல 'இந்திரன் சந்திரன்' படத்தில் மேயராக வரும் கமலின் வாய்ஸில் ஒரு பாடல் பாட வேண்டும்.
அந்தப் பாடலை மனோ குரலை மாற்றி பாடியிருப்பார். அதுதான் 'அடிச்சிடு கொட்டம்' என்ற பாடல். இவரும் அடிவயிற்றில் இருந்து குரலை தொண்டையில் கொண்டு வந்து கரகரத்த அதே நேரம் கனத்த குரலில் கஷ்டப்பட்டு பாடி இருந்தார். இருவரும் கமல் படத்தின் பாடலுக்கு கஷ்டப்பட்டுப் பாடியிருக்கிறார்கள்.

kolusu oru kaithiyin diary
அந்த வகையில் மலேசியா வாசுதேவன் தன்னை யார் நடிகர் ஆக்கினார், யார் பாடகர் ஆக்கினார் என்றும் இப்படி சொல்கிறார். என்னை நடிகன் ஆக்கியது கேஎஸ்.மாதங்கன் என்ற டைரக்டர். அவர் 'கொலுசு' என்ற படத்தின் இயக்குனர். அந்தப் படத்தில் வில்லனாக நடிப்பது யார்னு கேட்டார். அந்தப் படத்தில் நான் நடிச்சேன். அப்போ என் நடிப்பைப் பார்த்த பாரதிராஜா 'என்னய்யா இவன் நடிக்கிறான்?'னு கேட்டு என்னைப் பார்த்துக் கேட்டார்.
'ஆமா சொன்னா நீ சான்ஸ் கொடுக்கப் போறீயா?'ன்னு கேட்டேன். அப்படி வந்ததுதான் ஒரு கைதியின் டைரி படம். அதுல நான் வில்லனா நடிச்சது பெரிய அளவில் பேசப்பட்டது. எனக்குக் கிடைச்ச நண்பர்கள் அப்படி. ஒரு நண்பர் என்னைப் பாடகர் ஆக்கினார். இன்னொரு நண்பர் என்னை நடிகராக்கினார் என்கிறார் மலேசியா வாசுதேவன்.
பதினாறு வயதினிலே படத்தில் எஸ்பிபி பாட வேண்டிய ஒரு பாடல். அப்போது அவரால் வர முடியவில்லை. அந்த நேரத்தில் இளையராஜா மலேசியாவாசுதேவனுக்கு வாய்ப்பு கொடுத்து பாட வைத்தார். அதுதான் 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' பாடல். அப்படித்தான் மலேசியாவாசுதேவன் பாடகர் ஆனார். கொலுசு படத்துக்கு இசை அமைத்தவர் மலேசியாவாசுதேவன் என்பது குறிப்பிடத்தக்கது.