இரண்டு முறை விவாகரத்தான மலையாள நடிகைக்கு தொடர் உதவி.. விஷால் மனசும் ரெம்ப பெருசு தான்…

Published on: July 16, 2022
---Advertisement---

மலையாள சினிமாவில் 90-காலங்களில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஷர்மிளா. இவர், ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய “ஒயிலாட்டம்” உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.  தமிழ் சினிமாவை விட இவருக்கு மலையாள திரையுலகில் நல்ல மார்க்கெட் இருந்தது.

தற்போது, சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால், பல மாதங்களாக இவர் வறுமையில் வாடி வருகிறார். இதற்கிடையில், இவர் நடிகர் பாபு ஆண்டனியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. கடந்த 1995-ல் தொலைக்காட்சி நடிகர் கிஷோரை திருமணம் செய்தார்.

இதையும் படிங்களேன் – லோகேஷ் வேண்டாம்.. டான் பக்கம் சாய்ந்த தளபதி விஜய்.?! சிபி செய்த வேலையால் பதறும் ரசிகர்கள்..

ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய, பின்னர் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு இருக்கிறான், ஆனால் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பால் இவரையும் விவாகரத்து செய்தார்.

இப்பொது, தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் நடிகை சர்மிளாவிற்கு வறுமை காரணமாக வாடி வருவதால், சிலரிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால், பலர் இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேசிய சமீபத்திய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இதனை அறிந்த நடிகர் விஷால் அவருக்கு உதவியுள்ளாராம்.  இதனை அவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறினார். மேலும், விஷாலின் கருணையால்தான் எனது மகனின் பள்ளிக் கட்டணம் சரியான நேரத்தில் செலுத்தப்படுகிறது என்று கூறிய சார்மிளா, கடந்த 6 ஆண்டுகளாக விஷால் அதைச் செய்து வருவதாகக் கூறினார்.

அது மட்டும் இல்லை, விஷால் தனது மகனுக்கும் நிதியுதவி அளிப்பதோடு கடந்த ஆண்டு அவர் மறைந்த புனித் ராஜ்குமாரால் நிதியுதவி பெறும் 1800 மாணவர்களை அவர் மறைந்த பிறகு தொடர்ந்து கவனித்துக்கொள்வதாகக் தெரிவித்தார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.