எஸ்.பி.பி வர லேட் ஆனதால் மலேசியா வாசுதேவனுக்கு கிடைத்த வாய்ப்பு!.. அது மட்டும் நடக்கலன்னா!..

by சிவா |   ( Updated:2024-02-28 07:21:03  )
malaysiva
X

malaysi vasudevan: இளையராஜா மூலம் தமிழ் சினிமாவில் பல புதிய பாடகர்கள் மற்றும் பாடகிகள் அறிமுகமானார்கள். முக்கியமாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம், யோசுதாஸ் ஆகியோர் ஏற்கனவே சில பாடல்களை பாடியிருந்தாலும் இளையராஜாவின் இசையில் இவர்கள் மிகவும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார்கள்.

எஸ்.பி.பி, மனோ, யோசுதாஸ், மலேசியா வாசுதேவன், சித்ரா, எஸ்.ஜானகி, ஜெயச்சந்திரன் என பலரையும் பல பாடல்களை பாட வைத்தார் இளையராஜா. ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பலருக்கும் காதல் பாடல்களுக்கு எஸ்.பி.பி.யின் குரல் பொருத்தமாக இருந்தாலும் அவர்களுக்கு பல பாடல்களை மலேசியா வாசுதேவனும் பாடியிருக்கிறார்.

இதையும் படிங்க: இளையராஜா பயோபிக்! இயக்குனரை டிக் செய்த இசைஞானி.. ஆனா கண்டீசன் என்ன தெரியுமா?

அவர்களுக்கு மட்டுமல்ல சிவாஜிக்கும் பல பாடல்களை மலேசியா வாசுதேவன் பாடியிருக்கிறார். ‘ஒரு கூட்டுக்கிளியாக ஒரு தோப்பு குயிலாக’ பாடலை பார்த்தால் சிவாஜி பாடுவது போலவே இருக்கும். முதல் மரியாதை படத்தில் ‘பூங்காத்து திரும்புமா’ பாடலை ரசிகர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள்.

malaysia

அதேநேரம், மலேசியா வாசுதேவனுக்கு அதிகமான பாடல்களை பாட வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்பது பலருக்கும் தெரியாது. பதினாறு வயதினிலே படம் உருவானபோது மலேசியா வாசுதேவன் ஒரு அறிமுக பாடகராகத்தான் இருந்தார். பெரிதாக வாய்ப்பு இல்லை. எனவே, இளையராஜா இசையமைக்கும் ஸ்டுடியோவிலேயே இருப்பார். தேவைப்படும்போது அவரை பாட வைப்பார் இளையராஜா.

அந்த படத்தில் இடம் பெற்ற ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடலை எஸ்.பி.பியே பாடுவதாக இருந்தது. ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் அவர வரவில்லை. எனவே, மலேசியா வாசுதேவனை பாடவைத்து ஒரு டிராக் எடுப்போம். எஸ்.பி.பி வந்ததும் பாடலை போட்டு காட்டி அவரை பாட வைக்கலாம் என இளையராஜா சொன்னார்.

இதையும் படிங்க: என்னை உருவாக்கியதே அந்த பாடல்தான்!.. பலவருடங்கள் கழித்து இசைஞானி இளையராஜா சொன்ன மேட்டர்!..

அதில் பாரதிராஜாவுக்கு விருப்பமில்லை என்றாலும் அரைமனதுடன் சம்மதித்தார். ஆனால், மலேசியா வாசுதேவன் பாடியதை கேட்டதும் ‘ஃபெண்டாஸ்டிக். இதுவே நல்லாருக்கு.. இதையே படத்துல வச்சிக்கலாம்’ என சொன்னார். அந்த பாடலுக்கு பின் பல படங்களிலும் பாட வாசுதேவனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன்பின் சிவாஜி உட்பட பலருக்கும் பாடல்களை பாடினார் வாசுதேவன். எஸ்.பி.பி இல்லாததால் கிடைத்த வாய்ப்பு என்பது கடைசி வரைக்கும் அவருக்கு நீடித்தது. அவரை பாட கூப்பிட்டாலே ‘எப்பா எஸ்.பி.பி. ஊர்ல இல்லயா?’ என கேட்டுவிட்டுதான் பாடவே வருவாராம். மறக்க முடியாத பல பாடல்களை பாடி விட்டு சென்றிருக்கிறார் அவர்.

Next Story