மற்ற மொழிகளில் வில்லனாக மாஸ் காட்டும் மலையாள நடிகர்கள்! எண்ட சாரே விநாயகன பீட் பண்ண முடியுமா?

Published on: June 9, 2024
varman
---Advertisement---

Malluwood Actors: சமீபகாலமாக தமிழ் ரசிகர்களின் மத்தியில் மலையாள நடிகர்கள் பெருமளவு வரவேற்பு பெற்று வருகின்றனர். அந்த வகையில் தமிழ் ரசிகர்கள் அதிகம் விரும்பப்படும் மலையாள நடிகராக இருப்பவர் நடிகர் பகத் பாசில். அதுமட்டுமல்லாமல் சில காலமாகவே தமிழில் பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவராத நிலையில் மலையாள படத்தின் வரவு அதிகமாக இருந்ததால் அந்த படத்தின் மீது தமிழ் ரசிகர்களின் ஆர்வம் திரும்பி இருக்கிறது.

அதற்கு ஏற்ற வகையில் வெளியான மலையாள திரைப்படங்கள் அனைத்துமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த சூழ்நிலையில் மற்ற மொழி சினிமாக்களில் மலையாள நடிகர்கள் வில்லனாக நடித்து மாஸ் காட்டி வருவதையும் நாம் பார்க்க முடிகிறது. அப்படி எந்தெந்த மலையாள நடிகர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது என்பதைத்தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படிங்க: அர்ஜூன் வீட்டு திருமணத்தில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? மூணு நாளைக்கு ஒரே ஆட்டம்தான் போங்க

அதில் முதலாவதாக ஃபகத் பாசில். புஷ்பா திரைப்படம் தான் அவரை வேற ரேஞ்சுக்கு கொண்டு சென்ற திரைப்படம். இந்தப் படத்தின் மூலம்  ஒரு சிறந்த நடிகராக அறியப்பட்டார். அதன் பிறகு விக்ரம் திரைப்படம். அதில் வில்லனாக இல்லாவிட்டாலும் தமிழ் மக்கள் நெஞ்சங்களில் இவரை ஆழமாக பதித்த படமாக விக்ரம் திரைப்படத்தை சொல்லலாம். அதற்குப் பிறகு வந்த மாமன்னன் திரைப்படம் தான் பகத்தை தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் ஆணி போல பதித்து வைத்தது.

அந்த படத்தில் ஒரு முரட்டுத்தனமான வில்லனாக நடித்து அசத்தியிருப்பார் . அடுத்ததாக விநாயகன்.ஜெயிலர் படத்தில் வர்மன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியிருப்பார் விநாயகன். அதற்கு முன்பு வரை அவரை சண்டக்கோழி படத்தில் பார்த்த ஞாபகம் தான் தமிழ் மக்களுக்கு இருந்தது. அதில் ஒரு எடுபிடி ரௌடியாகத்தான் நடித்திருப்பார். ஆனால் இந்தப் படத்தில் ரஜினிக்கே வில்லன் எனும் போது அவர் மீது கூடுதல் கவனம் திரும்பியது .

இதையும் படிங்க: நாங்க கேட்டது.. ஆனால் வந்தது! அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் சூர்யா.. இத எதிர்பார்க்கல

அதற்கு ஏற்ற வகையில் நடிப்பிலும் பூர்த்தி செய்தார் விநாயகன்.அடுத்ததாக பிரித்திவிராஜ். தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி சினிமாக்களிலும் ஒரு சிறந்த வில்லனாக தன்னை பிரதிபலித்து வருகிறார் பிரித்விராஜ். ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து ஒரு நல்ல வரவேற்பை பெற்றாலும் இப்பொழுது வில்லனாகவே இவரை பார்க்க மக்கள் ஆசைப்பட்டு வருகிறார்கள்.

ஹிந்தியில் அக்ஷய குமாருக்கு வில்லனாக நடித்து பாலிவுட்டிலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் ப்ரித்விராஜ் .அடுத்ததாக துல்கர் சல்மான். இவரை லவ்வர் பாயாக ஒரு பிளேபாயாகவே பார்த்த ரசிகர்களுக்கு இவர் எப்படா நெகடிவ் கேரக்டரில் நடித்தார் என்றுதான் தோன்றும். இருந்தாலும் சூப் என்ற ஹிந்தி படத்தில் நெகட்டிவ் கேரக்டரில்  நடித்ததன் மூலம் தாதா சாகேப் பால்கே என்ற சர்வதேச திரைப்பட விருதை வென்றிருக்கிறார். அதுவும் இந்தியில் துல்கர் சல்மான் பெரும் முதல் விருதும் கூட.  அதன் மூலம் ஹிந்தி சினிமாவில் இவருக்கு என ஒரு பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது.

இதையும் படிங்க; கார்த்திக் ஹீரோவாக நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது பாவா லட்சுமணனா? இது என்ன புதுசா இருக்கு?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.