More
Categories: Cinema News latest news

அழகான சாதிகாரி!.. மமிதா பைஜுவின் முதல் தமிழ் படம் அடுத்த வாரம் ரிலீஸ்!.. நாளை பாட்டு வருது!..

பிரேமலு படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்துள்ள நடிகை மமிதா பைஜு நடித்துள்ள முதல் தமிழ் படம் ரெபல் வரும் மார்ச் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவுக்கு பல புதுமுக நடிகைகளையும் பிற மொழி நடிகர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார் ஜி.வி. பிரகாஷ். அவர் நடிக்கும் படங்கள் ஓடவில்லை என்றாலும் அவர் படங்களில் நடிக்கும் ஹீரோயின்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம். சமீபத்தில், புரூஸ்லி படத்தில் நடித்த கிருத்தி கர்பந்தா எனும் பாலிவுட் நடிகைக்கு பிரபல பாலிவுட் நடிகர் புல்கிட் ஷர்மாவுடன் திருமணம் நடைபெற்றது.

இதையும் படிங்க: காலை பெங்களூர்… மாலையில் சென்னை.. ஒரே வருடத்தில் ரஜினிகாந்த் நடித்த 20 திரைப்படங்கள்…

ஜிவி பிரகாஷ் நடித்த புரூஸ்லீ என்னும் ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டுமே அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல ஷாலினி பாண்டே உள்ளிட்ட பல நடிகைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் ஜி.வி பிரகாஷ். அந்த வரிசையில் வரும் வெள்ளிக்கிழமை பிரேமலு படத்தின் மூலம் மமிதா பைஜு மீது பித்து பிடித்துப்போய் உள்ள கோலிவுட் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்க காத்திருக்கிறார்.

மமிதா பைஜு தமிழில் நடித்துள்ள ரெபல் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில் அந்த படத்தின் ”அழகான சதிகாரி” வீடியோ பாடல் நாளை மாலை 6:00 மணிக்கு ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் வெளியிடுகிறது. அந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது மமிதா பைஜு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: அவங்க ஏன் அங்க இருக்காங்க? போக சொல்லு… உதவியாளரை கடிந்துக்கொண்ட நடிகர் விஜய்…

Published by
Saranya M