Connect with us

Cinema History

காலை பெங்களூர்… மாலையில் சென்னை.. ஒரே வருடத்தில் ரஜினிகாந்த் நடித்த 20 திரைப்படங்கள்…

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் இப்போதெல்லாம் ஒரு வருடத்துக்கு ஒரு படம் நடிப்பதே அரிதாகிவிட்டது. ஆனால் குறிப்பிட்ட ஒரு வருடம் கிட்டத்தட்ட 20 படங்களில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார் என்ற ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது.

1978ம் ஆண்டு ரஜினி ரொம்பவே பிஸியாக இருந்தார். காலை, மாலை என பார்க்காமல் ஓடிக்கொண்டே இருந்தார். காலையில் பெங்களூர் சென்று நடித்துவிட்டு மாலை சென்னை திரும்பி வந்து இன்னொரு படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வாராம்.

இதையும் படிங்க: காதலை தூண்டிவிட்டு மறுத்த ஸ்ரீவித்யா… நடிகர் விட்ட சாபம்!.. ஐயோ பாவம் இப்படியா ஆகணும்!..

ஆயா கிரியேஷன் தயாரிப்பில் வி.சி.குகநாதன் இயக்கிய திரைப்படம் மாங்குடி மைனர். இப்படத்தில் தான் ரஜினிகாந்த் முதல்முறையாக ஆக்‌ஷன் வேடத்தில் நடித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்ததாம். காலையில் விமானம் மூலம் ஐதராபாத் சென்று மாங்குடி மைனர் படத்தில் நடிப்பார். மாலை சென்னை திரும்பி இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் நடிப்பார்.

ஒரே வருடத்தில் நாலாப்பக்கமும் பறந்துக்கொண்டே நடித்து வந்தார் ரஜினி. மாங்குடி மைனர் படத்தில் மொத்தமாக 18 நாட்கள் தான் கால்ஷூட் தான் கொடுத்தாராம் ரஜினிகாந்த். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து கொடுத்துக்கொண்டே இருந்தாராம். குறிப்பிட்ட இந்த வருடத்தில் மட்டுமே 20 படங்களில் ரஜினிகாந்த் நடித்தாராம்.

இதையும் படிங்க: அஜித்தின் சூப்பர்ஹிட் பாடல்… ஹீரோக்கு கங்கை அமரன்… ஹீரோயினுக்கு வாலி.. என்னங்க இப்படி?

google news
Continue Reading

More in Cinema History

To Top