நீங்க செஞ்சிட்டு போவீங்க.. அவனுங்க கிட்ட அது நடக்காதே… சூப்பர்ஸ்டாரே கடுப்பான சம்பவம்!
மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளைக் கடந்து முன்னடி நடிகராக இருந்து வருபவர் மம்மூட்டி. இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் மம்மூட்டி, படப்பிடிப்பு தளத்தில் தனக்கென சில விதிமுறைகளை இன்றளவும் கடைபிடித்து வருகிறார்.
மம்மூட்டி, தனது 20 வயதில் கே.எஸ்.சேதுமாதவனின் அனுபவங்கள் பாலிஷாக்கல் படத்தில் துணை நடிகராக அறிமுகமானார். முதன்முதலில் அவர் கதை நாயகனாக நடித்த படம் எம்.டி.வாசுதேவன் நாயரின் தேவலோகம். 1979-ல் உருவான அந்தப் படம் ரிலீஸாகவே இல்லை. அதன்பின் 1981-ல் வெளியான அஹிம்சா படம் மம்மூட்டிக்கு கேரள மாநில அரசின் விருதைப் பெற்றுத் தந்ததோடு நடிப்பில் அவருக்கான முத்திரையையும் பெற்றுக்கொடுத்தது.
இதையும் படிங்க: ‘கோட்’ ரிலீஸ் ஆகும் வரை கம்முனு இருங்க! ரசிகர்களை கப் சிப்பாக்கிய் விஜய்.. ஒரு முடிவோடத்தான் இருக்காரு
அதன்பின்னர், 1980களில் தொடங்கி இன்றுவரை மலையாளத்தில் அசைக்க முடியாத தனித்த இடம் மம்மூட்டிக்கு உண்டு. போட்டியாளராக அறியப்படும் மோகன்லால் மட்டுமல்லாது, எந்தவித ஈகோவும் இல்லாமல் சீனியர்கள் முதல் இளைய தலைமுறை நடிகர்கள் வரை இணைந்து நடிக்கும் வழக்கம் கொண்டவர். மலையாளத்தில் பல புதிய முயற்சிகளுக்கு விதை போட்டவர் என்கிற பெருமையையும் மம்மூட்டிக்கு உண்டு.
அதற்கு சிறந்தவொரு உதாரணம் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாலைநேரத்து மயக்கம், காதல் த கோர் போன்ற படங்கள். தமிழிலும் மறுமலர்ச்சி, ஆனந்தம் என தனி ஹீரோவாக மம்மூட்டி பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் மம்மூட்டி படப்பிடிப்பு நேரங்களில் தனக்கென வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டுவந்து விடுவாராம். தனது மேக்-அப் மேனுக்கு சம்பளம் உள்பட தனது செலவினங்களை அவரே பார்த்துக்கொள்வாராம்.
இதையும் படிங்க: அப்பாவியாக நடித்த சைதன்யா… சமந்தாவை பழிகடாவாக்கிய வக்கிர பின்னணி…
ஷூட்டிங் தளத்தில் தனக்கு சேர் எடுத்துப் போட்டால் கூட ஒப்புக்கொள்ளாத அவர், 'என்னை கெடுத்துடாதீங்கப்பா.. இப்படியெல்லாம் எதிர்பார்த்தா எங்க ஊர்ல என்ன வீட்டுக்கு அனுப்பிடுவாங்க’ என்று மென்மையாக மறுத்துவிடுவாராம். அதனால்தான் இன்றளவும் பல மொழிகளைச் சேர்ந்த திரைத்துறையினரும் மம்மூட்டியை நாடி வருகிறார்கள்.