மங்காத்தா 2 இதனால்தான் வரல.. நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த நடிகர்! என்ன தல நீங்க?

by Rohini |   ( Updated:2024-02-21 13:51:31  )
ajith
X

Mankatha: அஜித்தின் 50வது படத்தை பெரிய அளவில் ஹிட்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம்தான் மங்காத்தா. நினைத்த மாதிரியே அஜித்தின் கெரியரில் மங்காத்தா திரைப்படம் பெரிய மைல் கல்லாக அமைந்தது.

பில்லா படத்திற்கு பிறகு மங்காத்தா படத்தில் அஜித்தின் கிரேஷ் இன்னும் அதிகமாகி கொண்டே போனது. BGM ஆகட்டும் அவருடைய ஸ்டைல் ஆகட்டும் ரசிகர்களை பரவசப்படுத்தியது. வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: இளையராஜா கொடுத்த வாய்ப்பு.. சிவாஜி போட்ட கண்டிஷன்!.. மலேசியா வாசுதேவன் நடிக்க வந்தது ஏன்?

வாலி படத்திற்கு பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் படம் முழுக்க கலக்கியிருப்பார் அஜித். வில்லன் அஜித்தையும் ரசிகர்கள் ரசிக்க தொடங்கினார்கள். படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்த நிலையில் சில காலமாக மங்காத்தா 2 பற்றிய அப்டேட் இணையத்தில் பரவத் தொடங்கியது. வெங்கட் பிரபுவும் மங்காத்தா 2 வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை போல சில மேடைகளில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன், தனுஷ் பின்னாடி ஓடாத நாளே இல்ல! இப்படி பண்ணுவாங்கனு நினைக்கல.. வருத்தத்தில் சேரன்

இதற்கிடையில் மங்காத்தா படத்தில் நடித்த வைபவ் சமீபத்தில் ஒரு பேட்டியில் மங்காத்தா 2 படத்தை பற்றி சில தகவல்களை கூறினார். அதாவது மங்காத்தா 2 பற்றி அவ்வப்போது வெங்கட் பிரபுவிடம் கேட்பதுண்டு.

ஆனால் அஜித் சார் தரப்பில் இருந்து வெங்கட் பிரபுவை இதுவரை அழைக்கவில்லை. அதனால்தான் அப்படியே அமைதியாக இருக்கிறார் வெங்கட் பிரபு. இருந்தாலும் நான் அடிக்கடி மங்காத்தா 2 பற்றி பேசியிருக்கிறேன் என வைபவ் கூறினார்,

இதையும் படிங்க: ராஜ்கிரணுக்காக எல்லோரிடமும் சண்டை போட்ட தனுஷ்!.. அட இவ்வளவு நடந்திருக்கா!…

தற்போது வெங்கட் பிரபு விஜயை வைத்து கோட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். கோட் படத்திலும் வைபவ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கூடவே பிரேம்ஜியும் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசை.

Next Story