வாய்ப்பு கேட்ட தனுஷ்… அவமானப்படுத்திய மணிரத்னம்?? ஓஹோ.. இதுதான் விஷயமா??
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாகிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என பாராட்டுகள் குவிகின்றன. “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.
இதனிடையே தனுஷ் நடித்த “நானே வருவேன்” திரைப்படம் “பொன்னியின் செல்வன்” வெளியான நாளுக்கு முந்தைய நாள் வெளியானது. இது குறித்து இணையத்தில் “ஏன் பொன்னியின் செல்வனோடு வெளியிடுகிறார்கள்?” என பல கேள்விகள் எழுந்தது. மேலும் “நானே வருவேன்” திரைப்படத்திற்கு எந்தவிதமான புரோமோஷனும் இல்லை. திடீரென இத்திரைப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இது பல கேள்விகளை எழுப்பியது. இது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவிடம் கூட கேட்கப்பட்டது. எனினும் “பொன்னியின் செல்வனோடு போட்டி போட்டு வெளியிடவில்லை” என்பது போல் அவர் கூறிவிட்டார். இந்த நிலையில் தனுஷ் மற்றும் மணிரத்னம் ஆகியோரை குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் மணிரத்னம் அலுவலகத்திற்கு வாய்ப்பு கேட்டுச்சென்றிருக்கிறார். அப்போது மணிரத்னம் தனுஷை சரியாக கவனிக்கவில்லையாம். மேலும் பட வாய்ப்பு குறித்தும் பேசவில்லையாம். இதனை தனுஷ் அவமானமாக கருதிக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதே போல் மணிரத்னம் “ராவணன்” திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க தனுஷை அழைத்திருக்கிறார். ஆனால் தனுஷ் பழைய ஞாபகங்களை நினைவில் வைத்து “ராவணன்” திரைப்படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இந்த செய்தியை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்துடன் தனுஷ் போட்டி போட்டு தனது படத்தை வெளியிட்டதாக இணையத்தில் பல விவாதங்கள் பரவி வரும் வேளையில் செய்யாறு பாலு கூறிய செய்தி மேலும் விவாதங்களை கிளப்பியுள்ளது.