வீட்டிற்கு வெளியே நடந்த படப்பிடிப்பு… போலீஸை அழைத்து ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்… அடப்பாவமே!!
தமிழின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் மணி ரத்னத்திற்கு கொடைக்கானல் பகுதியில் சொந்தமாக ஒரு விருந்தினர் மாளிகை உள்ளதாம். அவ்வப்போது அங்கே சென்று ஓய்வெடுத்துக்கொள்வது அவரது வழக்கமாம்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது விருந்தினர் மாளிகையில் மணி ரத்னம் தங்கி இருந்தபோது, அந்த விருந்தினர் மாளிகைக்கு வெளியே ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்ததாம். அப்போது அங்கே நடந்த ஒரு சம்பவத்தை குறித்து மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
“மௌனகுரு”, “மகாமுனி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சாந்தகுமார். தனது முதல் திரைப்படமான “மௌனகுரு” திரைப்படத்திலேயே தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர் என்ற பெயரை பெற்றிருந்தார். அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்யாவை வைத்து “மகாமுனி” என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதையும் படிங்க: பிடிவாதத்தால் மண்ணை கவ்விய டாப் நடிகர்கள்… வாழ்க்கை ஒரு வட்டம்ன்னு சும்மாவா சொன்னாங்க!!
இதனை தொடர்ந்து தற்போது அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோரின் நடிப்பில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார் சாந்தகுமார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் பகுதியில் நடைபெற்றதாம். அப்போது மணி ரத்னம் தங்கி இருந்த விருந்தினர் மாளிகைக்கு அருகே அவர்கள் ஒரு காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தார்களாம்.
அங்கே மணி ரத்னத்தின் விருந்தினர் மாளிகை அமைந்திருக்கிறது என்ற செய்தி படக்குழுவினருக்குத் தெரியாதாம். அப்போது படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஒரு பிரம்மாண்ட விளக்கின் வெளிச்சம் மணி ரத்னத்தின் வீட்டிற்குள்ளே தற்செயலாக புகுந்துவிட்டதாம். இந்த சம்பவத்திற்கு பிறகு சில மணி நேரங்களில் அந்த இடத்திற்கு சில காவலர்கள் வந்திருக்கிறார்கள்.
“இங்கே அருகில் மணி ரத்னத்தின் வீடு இருக்கிறது. அங்கே அவர் இப்போது தங்கியிருக்கிறார். அவரை நீங்கள் தொந்தரவு செய்வதாக எங்களுக்கு புகார் வந்திருக்கிறது” என கூறினார்களாம். இதனை கேட்ட படக்குழுவினர் ஷாக் ஆகிவிட்டனராம். இதனை தொடர்ந்து அந்த இடத்தை காலி செய்யுமாறு படக்குழுவினரிடம் கூறினார்களாம் காவலர்கள். ஆதலால் சாந்தகுமார் தனது திரைப்படத்தின் படப்பிடிப்பை வேறு பகுதிக்கு மாற்றிவிட்டாராம்.