பாடல்களே இல்லாமல் படமெடுக்க முடிவு செய்த மணிரத்னம்… அதிர்ச்சியில் உறைந்துப் போன மாதவன்…
கடந்த 2000 ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “அலைபாயுதே”. இத்திரைப்படம் காலத்தை தாண்டியும் பேசப்படும் திரைப்படமாக திகழ்ந்தது. தற்கால தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் மிக நெருக்கமான திரைப்படமாக “அலைபாயுதே” அமைந்திருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் காலத்தை தாண்டியும் ரசிக்கும்படியாக அமைந்தது. “பச்சை நிறமே”, “சினேகிதனே”, “செப்டம்பர் மாதம்”, “காதல் சடுகுடு”, “எவனோ ஒருவன்” ஆகிய அனைத்து பாடல்களும் மாபெறும் ஹிட் அடித்தன.
“அலைபாயுதே” திரைப்படத்திற்குப் பிறகு காதலர்கள் பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்ளும் டிரெண்டு அதிகமாக உருவானதாக பல விமர்சனங்களும் எழுந்தன. அந்த அளவுக்கு அக்காலகட்டத்தில் காதலர்களிடையே பெரும் தாக்கத்தை உண்டு செய்த திரைப்படம் என்று கூட கூறலாம்.
இந்த நிலையில் “அலைபாயுதே” திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது “அலைபாயுதே” திரைப்படத்தை உருவாக்கும்போது இத்திரைப்படத்தை பாடல்களே இல்லாத திரைப்படமாக உருவாக்க முடிவு செய்திருந்தாராம் இயக்குனர் மணி ரத்னம். மணி ரத்னத்தின் இந்த முடிவால் நடிகர் மாதவன் அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.
மணி ரத்னம் தனது திரைப்படத்தின் பாடல்களை மிகவும் அழகாக படமாக்குவார். அப்படிப்பட்ட பாடல் காட்சியில் தான் நடிப்பதற்கான வாய்ப்பிலாமல் போய்விடுமோ என மாதவன் துடித்துப்போனாராம். எனினும் அதன் பின் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார் மணி ரத்னம். அத்திரைப்படத்தின் பாடல்கள் வேற லெவலில் ஹிட் அடித்தது என்பதை ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.
இதையும் படிங்க: முழுக்க முழுக்க இந்த நடிகரின் தாக்கம் தான்!.. அஜித்தின் வில்லன் கேரக்டருக்கு பின்னனியில் இருக்கும் சம்பவம்…