Dhanush: தனுஷ் அராஜகத்தின் தலைவன்.. உன் குடும்பம் தரமான குடும்பமா? ஒரேடியா சாய்ச்சுப்புட்டாரே

dhanush 2
Dhanush: நயன்தாரா மற்றும் தனுஷ் இவர்களுக்கு இடையேயான அந்த பிரச்சினைக்கான தீர்ப்பு இன்று நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நயன்தாராவுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர தனுசுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார் .இதன் காரணமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது .
இப்படி தனுஷ் தரப்புக்கு ஆதரவாக வந்த இந்த தீர்ப்பு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தனுஷை பற்றி கடுமையாக பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றது .அராஜகத்தின் தலைவன் தனுஷ் என மாணிக்கம் நாராயணன் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: பாரதிராஜா படத்தில நடிக்கறது எவ்ளோ பெரிய விஷயம்..! ஷோபனா மறுக்க என்ன காரணம்?
அது மட்டுமல்ல உன்கிட்ட பணமா இல்ல? பணத்த வச்சு என்ன பண்ண போற? நீ நல்லா வசதியா இருக்க. உனக்கு என்ன குறைச்சல்? யாரோ ஒரு லேடி அவங்க ஏதோ பணத்துக்காக படம் எடுக்குறாங்க .சம்பாதிக்க ட்ரை பண்றாங்க. அந்த லேடி ஒரு காலத்தில் சீரழிஞ்சு நல்ல பெயர் வாங்கி மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார்.
அவர்களை ஏன் நீ அவமரியாதை பண்ற? உனக்கு இந்த பணம் வந்து தான் எல்லாம் நடக்கணுமா ?வேற பணம் இல்லையா? உன்னால எத்தனை தயாரிப்பாளர் செத்து இருக்காங்க. உனக்கு ஒரு வயசு ஆச்சு. இந்த வயசுல அந்த ஒரு பரந்த மனப்பான்மை இல்லையா ?அந்த காசை வாங்கிட்டு என்னதான் பண்ண போற ?ஒருத்தர அவமானப்படுத்தி நீயும் அவமானப்பட்டு சேத்துல கல் எறிஞ்சா அது உன் மேல தானே வந்து விழும் .

nayanthara
அதை பத்தி நீ கவலை பட மாட்டியா ?உன்னுடைய குடும்பம் தரமான குடும்பமா? அதை முதலில் பாரு. உன் குடும்பத்தின் தரத்தை முதலில் உயர்த்து. உன்னுடைய எண்ணங்களை உயர்த்து .நீ கீழ் ஜாதியை வைத்து படம் எடுப்ப .அதை வச்சு வாழ்க்கையை ஓட்டுவ. எவ்வளவு நாள் தான் இப்படியே ஓட்டுவே. ஒரே வைலன்ஸ் .அதில் பல வன்முறை காட்சிகளை வைத்து இருக்கிற.
இதையும் படிங்க: 50 கோடியும் இல்ல!.. கல்யாண கேசட்ட விற்கவும் இல்ல!.. நாகசைதன்யா திருமணம் குறித்து வெளிவந்த உண்மை!..
இளைஞர்களை நாசப்படுத்திக் கொண்டிருக்கிற. நல்ல படத்தை எடுங்க .எம்ஜிஆர் நடிக்கிற வரைக்கும் தன்னால் மற்றவர்கள் யாரும் கெட்டுப் போகக்கூடாது என தன்னுடைய படத்தில் குடிப்பது ,புகை பிடிப்பது என எதையும் காட்ட மாட்டார். ஆனால் உன் படத்துல அப்படியா இருக்கு என தன்னுடைய வாய்க்கு வந்தபடி தனுசை பேசி இருக்கிறார் மாணிக்கம் நாராயணன்.