பெரிய மனுஷனா? ‘சிவாஜி’ பட சூட்டிங்கில் ஷங்கரை லெஃப்ட் ரைட் வாங்கிய தயாரிப்பாளர்

Published on: April 30, 2024
shankar
---Advertisement---

இன்று தமிழ் சினிமா ஒரு வளர்ச்சியின் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. 80, 90கள் வரை தமிழ் சினிமா அதற்கென வைக்கப்பட்ட ஒரு வரையறைக்குள் தான் இருந்து வந்தது. ஆனால் அதன் பிறகு தமிழ் சினிமா வேறொரு பரிணாமத்திற்கு தள்ளப்பட்டது. அதற்கு காரணமானவர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர்.

பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தவர் என்று சொல்லலாம். ஒரு சினிமாவை இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக எடுக்க முடியுமா என்ற ஆச்சரியத்தையும் வரவழைத்தவர் ஷங்கர். ஜென்டில்மேன் படத்தின் மூலம் அறிமுகமான ஷங்கர் எஸ் ஏ சந்திரசேகர் இடம் உதவி இயக்குனராக இருந்தவர். முதல் படத்திலேயே தன்னுடைய திறமையை நிரூபித்தார்.

அதனைத் தொடர்ந்து காதலன் திரைப்படம் மூலம் ஒரு நிலையான இடத்தை இந்த தமிழ் சினிமாவில் பிடித்தார். இந்த இரண்டு படங்களின் வெற்றியால் அடுத்தடுத்து பெரிய பெரிய நடிகர்களை இயக்கும் வாய்ப்பு ஷங்கருக்கு கிடைத்தது. அவர் எடுக்கும் படங்கள் எல்லாமே பிரம்மாண்டம் தான். அதில் இருக்கும் பாடல் காட்சிகள் ஆகட்டும். அந்த பாடல் காட்சிகளையும் கோடிக்கணக்கான அளவில் பணத்தை போட்டு அதையும் பிரம்மாண்டமாக எடுப்பதில் மிகச்சிறந்த இயக்குனர் ஷங்கர்.

இதையும் படிங்க: ஆசை திரைப்படம் முதலில் நடிக்க இருந்தது அஜித் இல்லையாம்!… மிஸ் செய்த பிரபலம்…

ஷங்கர் குறித்து பிரபல சினிமா தயாரிப்பாளராக மாணிக்கம் நாராயணன் ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். வேட்டையாடு விளையாடு படத்தின் ஆடியோ விழாவிற்கு கௌதம் மேனன் மணிரத்தினத்தையும் ஷங்கரையும் அழைக்க நினைத்தாராம். ஆனால் மணிரத்தினத்துடன் மாணிக்கம் நாராயணன் கருத்து வேறுபாட்டில் இருந்ததால் அவர் வேண்டாம். ஷங்கரிடம் நான் பேசுகிறேன் என சிவாஜி சூட்டிங்கில் இருந்த சங்கரை பார்க்க அவருடைய செக்ரட்டரியிடம் அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கிறார் மாணிக்கம் நாராயணன்.

ஷங்கரும் அவரை அங்கு வர சொன்னாராம். மாணிக்கம் நாராயணன் போகும்போது சிவாஜி ஷூட்டிங்கில் ஷங்கர் பிசியாக இருந்திருக்கிறார். அந்த காட்சி படமாக்கும் வரை மாணிக்கம் நாராயணன் அங்கே காத்துக் கொண்டிருந்தாராம். ஆனால் சங்கர் காட்சியை படமாக்கிவிட்டு இவரை பார்க்காமல் பின் வழியாக காரை எடுத்து கிளம்பி விட்டாராம்.

mani
mani

இதையும் படிங்க: இளையராஜாவுடன் உடனே நடந்தது… அந்த பிரபலத்துக்காக மூன்று மாதம் காத்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான்!…

இதை பார்த்ததும் மாணிக்கம் நாராயணன் கடுப்பில் ஷங்கரின் செகரட்டரியை அழைத்து கண்டபடி திட்டி இருக்கிறார். அவர் மனுஷன் தானே? என்னை வரவழைத்து விட்டு அவர் பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறார். பெரிய மனுசனா எப்படி நடந்துக்கணும்னு அவருக்கு தெரியாதா? என தன் வாய்க்கு வந்தபடி சங்கரைப் பற்றி திட்டி இருக்கிறார். மேலும் அடுத்த நாள் நீயே என்னை தொலைபேசியில் அழைத்து டைம் ஃபிக்ஸ் பண்ணி அழைத்தால் மட்டுமே வருவேன். இல்லையென்றால் அந்த ஷங்கர் இல்லாமல் நான் ஆடியோ விழாவை நடத்திக் கொள்கிறேன் என கோபமாக பேசி விட்டாராம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.