Cinema News
அவன நடிக்க மட்டும் சொல்லுடா.. ஹீரோவின் ஆட்டிடியூடால் கடுப்படைந்த மணிரத்னம்
இன்று தமிழ் சினிமாவில் அண்ணாந்து பார்க்கும் ஒரு மாபெரும் இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். ஆனால் அவர் கன்னடம், மலையாள மொழிகளில் படங்களை இயக்கிய பிறகு தான் தமிழுக்கு வந்தார். மணிரத்னம் முதன்முதலில் கன்னடத்தில் தான் படத்தை இயக்கினார். அந்த படத்தின் பெயர் பல்லவி அனு பல்லவி. அந்த படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா .
அதில் ஹீரோயினாக நடித்தவர் லட்சுமி. இப்படி அவர் அறிமுகமான கன்னட படத்தில் பெரும்பாலும் தமிழ் கலைஞர்கள் தான் பணியாற்றி இருந்தனர் .அந்தப் படம் நல்ல வசூலை அள்ளியது. அதுவும் குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் பார்ப்பது திரைப்படமாக அமைந்தது .அதனால் அனைவரின் பார்வையும் மணிரத்னத்தின் மீது திரும்பியது.
இதையும் படிங்க: நான் நாகார்ஜூனா வீட்டு மருமகளா? உண்மையை போட்டு உடைத்த விஜய் நாயகி
அதன் பிறகு மலையாளத்தில் ஒரு சில படங்களை இயக்கினார். அதன் பிறகு தமிழில் மௌன ராகம் படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். இந்தப் படம் ஒரு பெஞ்ச் மார்க்கை கிரியேட் செய்தது. அதன் மூலம் தமிழில் அதுவரை பல இயக்குனர்கள் இயக்கிய படங்களின் ஸ்டைலில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது மணிரத்தினத்தின் ஸ்டைல்.
மணிரத்னம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகி கிட்டத்தட்ட 38 வருடங்கள் ஆகின்றது. 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமலுடன் இணைந்து தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார் மணிரத்தினம். நாயகன் படத்திற்கு பிறகு இருவரும் இணையும் இரண்டாவது திரைப்படமாக இந்த தக் லைஃப் திரைப்படம் அமைகிறது. அதனால் இந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் மணிரத்னத்தை பற்றி நடிகர் கார்த்தி சமீபத்திய ஒரு விழாவில் பேசி இருப்பது பெரும் வைரலாகி வருகிறது. அதாவது உதவி இயக்குனராக ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தில் பணியாற்றினார் கார்த்தி. அந்தப் படத்தில் 3 ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக சித்தார்த் நடித்திருப்பார். கார்த்திக்குக்கு முன்னாடியே சித்தார்த் சினிமாவில் நுழைந்துவிட்டாராம்.
இதையும் படிங்க: யாரு சொன்னா? அடுத்த தல, தளபதி நாங்கதான்.. கட்டியணைத்து போஸ் கொடுக்கும் சிம்பு – தனுஷ்
அதனால் கார்த்திக்கு சித்தார்த் சீனியர் என கார்த்தி அந்த விழாவில் கூறினார். ஆயுத எழுத்து படத்தின் முதல் நாள் சூட்டிங்கில் சித்தார்த் உள்ளே வந்தாராம். அப்போது அங்கு இருக்கும் அனைத்து ஆர்டிஸ்ட்டுக்கும் நடிப்பை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாராம். அது மட்டுமில்லாமல் லைட் செட்டிங் பார்ப்பது, டோர் சரியாக இருக்கிறதா என பார்ப்பது என மற்ற வேலைகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாராம். அதை பார்த்த மணிரத்னம் கார்த்தியிடம் வந்து ’டேய் அவன நடிக்க மட்டும் சொல்லுடா’ என கூறினாராம் மணிரத்தினம். இதை அந்த விழாவில் கார்த்தி கூறி மேடையில் இருந்த அனைவரையும் சிரிப்பு மழையில் நனைய வைத்தார்.