Cinema News
மகனின் தயவால்தான் வண்டியே ஓடுதா? லீக் ஆன மணி சார் ரகசியம்..
தமிழ் சினிமாவில் ஒரு புள்ளியாக இருப்பவர் இயக்குனர் மணிரத்தினம். வாழ்க்கையில் ஒரு முறையாவது மணிரத்தினத்தின் படத்திலாவது நடிக்க மாட்டோமா? என்ற ஆசையில் ஏராளமானோர் சினிமாவில் வாய்ப்பு கேட்டு வந்து கொண்டிருக்கின்றனர். தமிழ் ,ஹிந்தி என பல மொழிகளில் படங்களை எடுக்கும் மணிரத்தினம் ஒரு தயாரிப்பாளரும் கூட.
தன்னுடைய நிறுவனமாக மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். சமீபத்தில் கூட பெரும் வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன் படத்தையும் லைக்கா நிறுவனத்தோடு மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் சேர்ந்து தான் தயாரித்தது.
இதையும் படிங்க : பெரிய நடிகர் ஒன்னும் கிடையாது! ஆனால் பேய் ஓட்டம் ஓடிய திரைப்படங்கள்
இத்தனை பிரம்மாண்டமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினத்திற்கு ஒரே ஒரு வாரிசுதான். அவருடைய மகனான நந்தனை ஏன் இன்னும் சினிமாவில் உள்ளே இழுக்க வில்லை என அனைவரின் கேள்வியாக இருக்கின்றது. இயக்குனர் ஷங்கர் மகளான அதீதீ கூட சினிமாவில் பின்னி பிடலெடுத்து வருகிறார்.
அப்படி இருக்கும் போது ஏன் மணிரத்தினம் மட்டும் செய்யவில்லை என்று கேட்கின்றனர். ஆனால் அவருடைய மகன் நந்தன் மறைமுகமாக சினிமாவிற்கு சில விஷயங்களை செய்து கொண்டுதான் இருக்கின்றாராம். லைக்கா நிறுவனத்தில் ஒரு முக்கியமான பொறுப்பில் இருப்பது கூட மணிரத்தினத்தின் மகன் தான் என்று கூறுகிறார்கள்.
பொன்னியின் செல்வன் படத்தை தயாரிக்கும் போது லைக்கா நிறுவனம் கொஞ்சம் அடிமட்டத்தில் தான் இருந்தது. அந்தப் பட தயாரிப்புக்கான செலவுகளை தனது நண்பர்கள் , தெரிந்து தொழிலதிபர்கள் மூலமாக நந்தன் தான் 500 கோடியை ஏற்பாடு செய்து கொடுத்தாராம். அதிலிருந்தே லைக்கா நிறுவனத்தில் ஒரு பார்ட்டனராகவே மணிரத்தினத்தின் மகன் மாறிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.
இதையும் படிங்க : வயசு போச்சுனா என்ன ? தெம்பு இருக்குல! 40 வயசுல திருமணமாகி அஜால் குஜால் செய்த நடிகைகள்