ஆசையோடு வந்த லைகா.. ரஜினியை ஓரங்கட்டி பிளான் போட்ட மணிரத்னம்… ஓஹோ இதுதான் விஷயமா??
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாகிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என பாராட்டுகள் குவிகின்றன.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளால் திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன.
இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது பேசிய ரஜினிகாந்த், “பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என நான் ஆசைப்பாட்டேன்” என்று கூறினார்.
இது குறித்து பல பேட்டிகளில் மணிரத்னத்திடம் கேட்டபோது “ரஜினிகாந்தை வைத்து இயக்கினால், அத்திரைப்படத்தின் கதையையே மாற்றவேண்டியதாக இருக்கும்” என கூறினார்.இந்த நிலையில் தற்போது மணிரத்னம் குறித்து ஒரு புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “செக்க சிவந்த வானம்”. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டிருந்தது. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லைகா நிறுவனம் மணிரத்னத்திடம் ரஜினியை வைத்து ஒரு படம் தயாரிக்கலாம் என கூறியிருக்கிறது.
இதனை கேட்ட மணிரத்னம் “வேண்டாம். நாம் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்குவோமா?” என கூறியிருக்கிறார். அதாவது லைகா நிறுவனம் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க திட்டமிட, ஆனால் மணிரத்னம் அந்த வாய்ப்பை பொன்னியின் செல்வனுக்காக பயன்படுத்திக்கொண்டாராம். இவ்வாறு ஒரு தகவல் வெளிவந்துள்ளது. எப்படியெல்லாம் யோசித்திருக்கிறார் மணி சார்!!