சின்ன சின்ன ஆசை பாடல் ஒரு விளம்பரத்தின் காப்பியா? கசிந்த தகவல்...
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான சின்ன சின்ன ஆசை பாடல் இன்று பலருக்கும் பேவரிட் லிஸ்டில் இருக்கிறது என்றே கூறலாம். ஆனால் அந்த பாடலின் இசை ஒரு விளம்பரத்தில் இருந்து உருவப்பட்டது என்ற தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவின் ஆஸ்கார் நாயகன் முதலில் சினிமாவிற்கு இசையமைக்கவில்லை. அவர் விளம்பரங்களுக்கு தான் முதலில் இசையமைத்து வந்தார். இதில் பூஸ்ட், ஏசியன் பெயின்ட்ஸ், ஏர்டெல், லியோ காபி ஆகிய விளம்பரங்கள் இவரில் இசையில் அப்போதே செம ஹிட் அடித்தது. 1990களில் ரோஜா படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
முதல் படத்திலே இவரின் இசை பலரினை மயக்கியது. படம் மட்டுமல்லாமல் பாடல்கள் செம வரவேற்பினை பெற்றது. அதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருதுக்கூட இப்படத்திற்கு கிடைத்தது. தொடர்ச்சியாக அவருக்கு பல வாய்ப்புகள் குவிந்தன. தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் இசையமைத்து வந்தார். முதலில் தன்னை அறிமுகப்படுத்திய மணிரத்னத்திற்கு அதற்கு பிறகான அத்தனை படங்களுக்கும் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானே இருக்கிறார். இதில் அவரின் ரோஜா படத்தில் சுவாரஸ்ய நிகழ்ந்து இருக்கிறது.
இதையும் படிங்க: ரஹ்மான் தான் வேணும்…ஒற்றைக்காலில் நின்ற விஜய்.. கடன் வாங்கி புக் செய்த தயாரிப்பாளர்…
அதாவது, ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை எனத் துவங்கும் ஒரு பாடல் அமைந்திருக்கும். இது பல பெண்களுக்கு மிகவும் பிடித்த பாடலாக இருக்கிறது. இப்பாடலில் முதலில் சில மியூசிக் இருக்கும். ஏலேஏலேலோ எனத் துவங்கும் இந்த இசை இப்பாடலுக்கு தயாரிக்கப்பட்டது இல்லை. அதற்கு முன்னரே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்த ஏசியன் பெயிண்ட்ஸ் விளம்பரத்தில் இடம் பெற்றதாம். அந்த இசையையே சின்ன சின்ன ஆசை பாடலுக்கு பயன்படுத்தினாராம். அடுத்த முறை பாட்டு கேட்கும் போது நல்லா கேட்டு பாருங்க!