குடியும் கும்மாளமாக இருந்த 'பம்பாய்' பட நடிகை! அந்த தொழிலால் நாட்டுக்கே பெருமை சேர்ந்த சம்பவம்

by Rohini |   ( Updated:2023-07-27 10:08:35  )
manisha
X

manisha

மணிரத்தினம் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் உருவான திரைப்படம் பம்பாய். இந்தப் படம் எப்பேற்பட்ட வெற்றியை பெற்றது என அனைவருக்குமே தெரிந்த விஷயம். ஆனால் இந்தப் படத்திற்காக நடிகை மனிஷா கொய்ராலாவை எப்படி தேர்ந்தெடுத்தார் மணிரத்தினம் என்பது தான் சுவாரஸ்யமான செய்தி.

நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட மனிஷா கொய்ராலா ஆரம்பத்தில் மாடலிங்கில்தான் தன்னை மிகவும் ஈடுபடுத்திக் கொண்டார். அப்படி ஒரு புகைப்படத்தை பார்த்த பிறகு தான் பம்பாய் படத்திற்கு மனிஷா சரியாக இருப்பார் என்று மணிரத்தினம் நினைக்க சென்னை வந்தார் மனிஷா.

manisha1

manisha1

ஆனால் கதையில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்று சொன்னதும் நடிக்க மாட்டேன் என்று மீண்டும் சொந்த ஊருக்கே போயிருக்கிறார். ஏனெனில் அப்போது மனிஷாவுக்கு 20 வயதுதான் இருக்கும். இந்த வயசில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவா என்று நினைத்தே போய்விட்டாராம். ஆனால் மனிஷாவின் நெருங்கிய தோழிகள் சில பேர் மணிரத்தினத்தை பற்றி பெருமையாக சொல்ல அவர் படத்தை வேண்டாம் என்று சொல்லியிருக்கீயே என சத்தம் போட்டார்களாம்.

இதையும் படிங்க :ஜெயிலர் பட முதல் விமர்சனம்: இதுல ரஜினி வேறமாறி!.. லீக் செய்த பயில்வான் ரங்கநாதன்!..

அதன் பிறகே மீண்டும் பம்பாய் படத்தில் இணைந்திருக்கிறார். அதனை தொடர்ந்து முதல்வன், பாபா போன்ற படங்களில் நடித்து ஒரு தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில் மனிஷா ஃபேஸ்புக் மூலமாக ஒருவரை காதலிக்க அவர் ஏமாற்றிவிட்டு போய்விட்டாராம். அந்த சோகத்தில் குடி, புகை என தன் வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார்.

manisha2

manisha2

இதனாலேயே அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாம். ஒரு கட்டத்தில் சொந்த ஊருக்கே சென்று விடலாம் என நேபாளத்திற்கே சென்றுவிட்டாராம் மனிஷா. நேபாளத்தில் சிறுமிகளை வைத்து விபச்சாரம் தலைதூக்க ஆரம்பித்ததாம். இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என துணிந்து இறங்கி அந்த தொழிலில் ஈடுபடும் பெரும் புள்ளிகளை மடக்கி பிடிக்க போலீஸுக்கு உதவிக்கரமாக இருந்தாராம் மனிஷா.

இதன் காரணமாகவே மனிஷாவின் புகழ் ஓங்கியிருக்கிறது. கேன்சரால் அவதிப்பட்டு வந்த மனிஷா எப்படியோ அதிலிருந்து தப்பி மறு ஜென்மம் எடுத்திருக்கிறாராம். சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறாராம் மனிஷா. இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க :‘அவ்வை சண்முகி’க்கே டஃப் கொடுக்கும் ரோல் : இந்தியன் 2-வில் மிரட்டப்போகும் லேடி கெட்டப்!…

Next Story