டிவி பேட்டி ஒன்றில் காதல் கோட்டை இயக்குனர் அகத்தியன் நடிகரும், இயக்குனருமான மணிவண்ணன் பற்றி பல சுவையான தகவல்களைப் பகிர்ந்தார். அதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
நாம் எதை விதைக்கிறோமோ அது தான் பல மடங்காகத் திரும்பக் கிடைக்கும். இதுதான் இயற்கையின் நியதி. இந்த பிரபஞ்ச சக்தியின் மகிமையே இதுதான். அப்படி ஒரு சம்பவம் நடிகரும், இயக்குனருமான மணிவண்ணனின் திரையுலக வாழ்வில் நடந்தது.
மணிவண்ணன் சந்திப்பு
Also read: வந்த நியூஸ் எல்லாமே ஃபேக்!.. செம வொர்க் நடக்குது!. எஸ்.கே.25 பரபர அப்டேட்!…
அந்தக் காலகட்டத்தில் அகத்தியன் சினிமாவில் நுழைவதற்கு முன் தான் எழுதிய பல கதைகளை எடுத்துக் கொண்டு போய் அப்போது பிரபல இயக்குனராக இருந்த மணிவண்ணனைப் போய்ப் பார்ப்பாராம். அவரும் அதைப் பார்த்து விட்டு சில கருத்துகளைச் சொல்வார்.
அது அகத்தியனுக்கும் பயனுள்ளதாக இருந்தது. இந்த சந்திப்பு தொடர்ந்தது. அந்த நேரம், அகத்தியனின் தந்தை ஊரில் காலமாகி விட்டார். ஊருக்குப் போக அகத்தியனின் கையில் காசு இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மணிவண்ணன்
1500 ரூபாய் தேவை
அப்போது அவசரத்துக்காக தெரிந்த நண்பர்களிடம் நூறோ, இருநூறோ வாங்கி இறுதிச்சடங்குக்குப் போய் விட்டு சென்னை வந்து விட்டார். அதன்பிறகு அவருக்கு சிக்கல் வந்தது. என்னன்னா மறுபடியும் 16வது நாள் காரியம் செய்ய வேண்டும். அப்போதும் அவரிடம் ஒரு பத்து ரூபாய் கூட இல்லை. ஆனால் அந்தக் காரியத்துக்கு அப்போது 1500 ரூபாய் தேவைப்பட்டது. என்ன செய்வது என தெரியாமல் தவித்தார்.
ரொம்ப நேரமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். சரி. மணிவண்ணனைப் போய்ப் பார்ப்போம்னு நினைத்தார். அதன்படி அவரைப் போய் பார்த்தார். நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். மணிவண்ணனும் அவர் சொல்வதையே அமைதியாகக் கேட்டார். ‘சரி. இப்போ நான் என்ன செய்யணும்’னு கேட்டார்.
முழு உரிமை
அகத்தியன் தயங்கியவாறு ‘ஒண்ணுமில்ல. கொஞ்ச நாளுக்கு முன்னாடி நான் உங்கக்கிட்ட ஒரு கதை சொன்னேன்… இல்லையா’ன்னு கேட்டார். ‘ஆமாம்’ என்றார் மணிவண்ணன். ‘அந்தக் கதையை உங்களுக்கேக் கொடுத்து விடுகிறேன். அதற்கான முழு உரிமையும் உங்களுக்குத் தான். அதற்குப் பதிலாக 1500 ரூபாய் கொடுத்து உதவுங்க’ என்றார்.
Also read: சிறுவனாக கமல் பார்த்த முதல் ஷூட்டிங்!.. நடித்த முதல் காட்சி!.. ஒரு பிளாஷ்பேக்!…
சில நிமிடங்கள் யோசித்துப் பார்த்தார் மணிவண்ணன். உடனே கைகளைப் பிசைந்து கொண்டு இருந்த அகத்தியனைப் பார்த்தார். இந்த பாருங்க அகத்தியன். ‘எந்த காரணம் கொண்டும் உங்க கதையை எங்கிட்டேயோ வேறு யாரு கிட்டேயுமோ விற்காதீங்க. சினிமா உலகில் எப்போ என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது.
ஒரு வேளை உங்க கதை நாளைக்கே உங்களை அடியோடு மாற்றலாம்’ என்றார். அதன்பிறகு ஒரு நிமிஷம் இருங்கன்னு சொல்லிட்டு வீட்டுக்குள் சென்று வந்த மணிவண்ணன்… ‘இந்தாங்க நீங்க கேட்ட 1500 ரூபாய்’ என்றார்.
சில வருடங்கள் கழிந்ததும் மணிவண்ணன் சொன்னது போலவே நடந்தது. காலம் மாறியது. அகத்தியனைத் தேடி அதிர்ஷ்ட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
காதல் கோட்டை உள்பட அகத்தியன் இயக்கிய 6 படங்களில் மணிவண்ணன் நடித்தார். ஒரு படத்தின் சூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. மணிவண்ணன் அகத்தியனை அழைத்தார்.
75 லட்சம்
‘உங்களது 6 படங்களில் தொடர்ந்து எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கீங்க. இதுவரை நான் வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா’ன்னு கேட்டார். அமைதியாகக் கவனித்தார் அகத்தியன். ’75 லட்சம்’ என்றார். ‘அன்னைக்கு அவசரத்துக்கு உங்களுக்கு 1500 கொடுத்தேன்.
ஆனா எதையும் எதிர்பார்த்துக் கொடுக்கலை. ஆனால் காலம் எப்படி எல்லாம் நம்மைக் கவனிக்கிறதுன்னு பாருங்க’ என்றார். கண்களில் கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சியுடன் அகத்தியன் மணிவண்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டார். இந்த சம்பவத்தை அகத்தியன் சொல்லும்போது நெஞ்சைப் பிழிவதாகவே இருந்தது.
பிரபஞ்சத்தின் ஈர்ப்பு
அந்த வகையில் இதுபோன்று பிரதிபலன் கருதாமல் செய்யும் உதவி கல் நெஞ்சையும் கரைய வைத்து விடும். அந்த உதவிக்குத் தான் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு அதிகம். அந்த மகத்தான சக்தியும் தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும். அது நீங்கள் இதுவரை எதிர்பாராத பலனையும் தரும் என்பது தான் இயற்கையின் நியதி.
நெட்பிளிக்ஸ் ஓடிடியில்…
Kamalhaasan: 1960ம்…
Keerthi suresh:…
Biggboss Tamil:…
ஆயுத பூஜையை…