2 பேர் நடிக்காம சத்தியராஜுக்கு வந்த வாய்ப்பு!. கேரியரையே மாத்தின கேரக்டர் அதுதான்!...
எம்.ஜி.ஆர் படங்களை பார்த்து சினிமாவுக்கு வந்தவர்தான் சத்தியராஜ். துவக்கத்தில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக பல படங்களில் நடித்தார். அதிகமான படங்களில் அவர் பேசிய ஒரே வசனம் ‘யெஸ் பாஸ்’ என்பதுதான்.
சினிமாவை பொறுத்தவரை ஒரு வேடத்தில் நடித்துவிட்டால் தொடர்ந்து அதுபோன்ற வேடமே தொடர்ந்து வரும். ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ படத்தில் கதாநாயகனாக நடித்தும் தொடர்ந்து அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் தேடிவரவில்லை. எனவே மீண்டும் வில்லனின் அடியாளாக நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: இரவோடு இரவாக கேப்டன் செய்த வேலை!.. ஆடிப்போய் சத்தியராஜ் செய்த காரியம்…
ஒருகட்டத்தில் நடிப்பை விட்டுவிட்டு சினிமாவை இயக்குவது என முடிவெடுத்தார். சில இயக்குனர்களிடம் கதை விவாதம், உதவி இயக்குனர் என வேலை செய்தார். விஜயகாந்திடம் சென்று ‘விஜி எனக்கு கால்ஷீட் கொடுங்கள். நான் ஒரு படம் எடுக்கிறேன்’ என கேட்டவர்தான் சத்தியராஜ். விஜயகாந்தும் யோசிக்காமல் அவருக்கு சம்மதம் சொன்னார்.
அப்படி இருந்த சத்தியராஜை மீண்டும் நடிகராக்கியது இயக்குனர் மணிவண்ணன்தான். இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். மணிவண்ணன் நூறாவது நாள் படத்தை இயக்கிய போது வில்லன் கதாபத்திரத்திற்கு ஒருவர் தேவைப்பட்டார். இயக்குனர் விஜயனிடம் கேட்டார் மணிவண்ணன். அதிக நாட்கள் இரவு நேரங்களில் நடிக்க வேண்டியிருந்ததால் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: சுருளிராஜன் சொன்ன அட்வைஸ்!.. அப்படியே ஃபாலோ பண்ண சத்தியராஜ்.. இது செம மேட்டரு!..
அடுத்தது அந்த வேடத்தில் தயாரிப்பாளர் பாலாஜியை நடிக்க வைக்க நினைத்து அவரை அணுகினார் மணிவண்ணன். ஆனால், அவரும் மறுத்துவிட்டார். அப்போதுதான் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த சத்தியராஜை காட்டி இவரையே நடிக்க வைக்கலாம் என சொன்னார் இயக்குனர் சுந்தர்ராஜன். சுந்தர்ராஜன், சத்தியராஜ், மணிவண்ணன் எல்லாம் ஒரு ஊர்க்காரார்கள் மற்றும் நண்பர்கள்.
அவர் அப்படி சொன்னதும் சத்தியராஜை அழைத்துகொண்டு ஒரு சலூனுக்கு போனார் மணிவண்ணன். அவருக்கு மொட்டை போட்டு ரவுண்டு கூலிங்கிளாஸ் போட்டு பார்த்த அவர் ‘இந்த படத்துல நீதான் நடிக்கிற’ என சொல்லிவிட்டார். நூறாவது நாள் படத்தில் சத்தியராஜின் கெட்டப்பும், வேடமும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அதன்பின் தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கியவர்தான் சத்தியராஜ்.
இதையும் படிங்க: விஜயுடன் நடிக்க மறுத்த சத்தியராஜ்!.. உடனே ஒப்புக்கொண்ட விஜயகாந்த்!.. கண்ணீர் விட்ட எஸ்.ஏ.சி…