ஆஹா என் ஆண்டவரை பார்த்துட்டேன்!.. மஞ்சுமெல் பாய்ஸ் ஃபைனல் கிளைமேக்ஸ் இதுதான்.. இயக்குநர் செம போஸ்ட்!

by Saranya M |   ( Updated:2024-02-28 09:22:59  )
ஆஹா என் ஆண்டவரை பார்த்துட்டேன்!.. மஞ்சுமெல் பாய்ஸ் ஃபைனல் கிளைமேக்ஸ் இதுதான்.. இயக்குநர் செம போஸ்ட்!
X

மலையாளத்தில் வெளியாகி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் பார்த்தே ஆகவேண்டும் என பைத்தியம் பிடிக்க வைக்கிற அளவுக்கு கடந்த வாரம் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் வேறலெவல் ஹிட் அடித்து வருகிறது.

அந்த படம் உருவாக முழுமுதற் காரணமே நம்ம கோலிவுட்டின் ஆண்டவர் கமல்ஹாசன் தான் என்பது அந்த படத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும். கொடைக்கானலில் உள்ள குணா குகையை காண செல்லும் நண்பர்கள் ரிஸ்க் எடுத்து தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்று சிக்கி விடுகின்றனர்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2வா?.. அடபோங்கயா!.. தீவில் ஜாலி பண்ணும் நெல்சன்.. கூட யாரெல்லாம் போயிருக்காங்க தெரியுமா?

நண்பர்களை எந்தவொரு கஷ்டமான சூழலிலும் கைவிடக் கூடாது என்பதை மையமாக கொண்டு உருவாகி உள்ள இந்த படத்தை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். உண்மையாகவே குணா குகையை தேடி உயிர் போகும் நிலையில், தப்பித்து வந்த நண்பர்கள் கதையை இயக்குநர் சிதம்பரம் இயக்கி உள்ளார்.

இதற்கெல்லாம் ஆணிவேராக இருந்ததே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படம் தான். சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான அந்த படத்திற்கு பிறகு தான் குணா குகை என்றே அந்த குகை பிரபலமானது.

இதையும் படிங்க: கேமியோ ரோலே இனிமே வேண்டாம்!… ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்த பட அப்டேட்..!

மேலும், ”மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது” என அந்த பாட்டையும் பக்காவாக பிளேஸ் செய்திருக்கிறார் இயக்குநர். இந்நிலையில், மஞ்சுமெல் பாய்ஸின் கிளைமேக்ஸே இதுதான் என கமல்ஹாசனை சந்தித்து ஆசி வாங்கிய போது எடுத்த போட்டோவை வெளியிட்டு தற்போது ரசிகர்களை சந்தோசமடைய செய்திருக்கிறார் இயக்குநர் சிதம்பரம்.

Next Story