ஒரு வழியா ஓடிடிக்கு வரும் மஞ்சுமெல் பாய்ஸ்!.. எந்த தளத்தில் எந்த தேதியில் வருது தெரியுமா?..

by Saranya M |   ( Updated:2024-04-19 20:01:42  )
ஒரு வழியா ஓடிடிக்கு வரும் மஞ்சுமெல் பாய்ஸ்!.. எந்த தளத்தில் எந்த தேதியில் வருது தெரியுமா?..
X

இந்த ஆண்டு மலையாள சினிமாவுக்கு பொன்னான ஆண்டு என்று சொல்லலாம். வெளியாகும் ஒவ்வொரு படங்களும் 50 கோடி, 100 கோடி, 200 கோடி என வசூலில் சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகின்றன.

மோகன்லால் நடித்து வெளியான மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் மட்டுமே இந்த ஆண்டு மலையாளத்தில் தோல்வியை தழுவிய படமாக மாறியது. ஆனால் தமிழ் சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள பல படங்களும் ஃபிலாப் லிஸ்டிலேயே சேர்ந்துள்ளது.

இதையும் படிங்க: நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையான அந்த ரெண்டு நடிகைகள்!.. யாருன்னு தெரியுமா?..

மலையாளத்தில் வெளியான பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ், பிரமயுகம், ஆடு ஜீவிதம், ஆவேசம், வருஷங்களுக்கு சேஷம் எனத் தொடர்ந்து அனைத்து படங்களுமே வெற்றிப் படங்களாக மாறியுள்ளன.

பிரேமலு, பிரமயுகம் உள்ளிட்ட திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி ஓடிடி ரசிகர்களையும் உலக அளவில் வெகுவாக கவர்ந்துள்ளது. ஆனால், மலையாள சினிமாவில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் மட்டும் இன்னமும் ஓடிடியில் வெளியாகவில்லையே என ரசிகர்கள் ஏங்கித் தவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மீண்டும் ரஜினியும் கமலும் ஒரே படத்தில் நடித்தால்? வெளியான ஷாக்கிங் தகவல்.. அட அவரே சொல்லியிருக்காரு

இந்நிலையில், வரும் மே மூன்றாம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. ஆரம்பத்தில் நெட்பிளிக்ஸ் இந்த படத்தை வெறும் 10 கோடிக்கு மட்டுமே வாங்குவோம் என அடம்பிடித்ததால் படக்குழு பெட்டரான டிஜிட்டல் விற்பனைக்காக காத்திருந்து டிஸ்னியிடம் படத்தை விற்றுள்ளதாக கூறுகின்றனர்.

மஞ்சுமெல் பாய்ஸ் பிப்ரவரி 22ம் தேதி வெளியான நிலையில், இதுவரை தியேட்டர் பாக்ஸ் ஆபிஸில் 230 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக கூறுகின்றனர். இந்த படம் தான் இந்த ஆண்டு மலையாள சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் என்கின்றனர். ஆடு ஜீவிதம் இன்னமும் 200 கோடி வசூலை தொடவில்லை.

இதையும் படிங்க: விஜய் டிவியின் அந்த சீரியல் ஹீரோ மயில்சாமியின் மகனா? இது தெரியாம போச்சே!…

Next Story