மம்முட்டி, மோகன்லால் ஓரமா போ!.. வசூலில் போட்டு பொளக்கும் மஞ்சுமெல் பாய்ஸ்!..

சமீபத்தில் வெளியான மலையாள படம்தான் மஞ்சும்மெல் பாய்ஸ். கமல் நடிப்பில் வெளிவந்த குணா படத்தில் இடம் பெற்ற கொடைக்கானல் குகையை மையக்கருவாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. சிதம்பரம் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். கொச்சினிலிருந்து 10 நண்பர்கள் ஒரு காரில் கொடைக்கானலில் உள்ள குணா குகையை பார்க்க செல்கிறார்கள்.
தடுப்பை மீறி எல்லோரும் உள்ளே போகிறார்கள். அப்போது அங்கிருந்த ஒரு குழியில் ஒருவர் விழுந்துவிடுகிறார். அதன்பின் அவரை எப்படி மீட்டனர் என்பதுதான் படத்தின் முக்கிய திரைக்கதை. இந்த படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவிப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.
இதையும் படிங்க: அச்சச்சோ!.. மஞ்சுமெல் பாய்ஸ் ஹீரோ இந்த தமிழ் இயக்குநரிடமா சிக்கி விட்டார்.. என்ன ஆகப்போகுதோ?
இத்தனைக்கு இந்த படத்தின் பல காட்சிகளில் வசனம் மலையாளத்தில் பேசப்படுகிறது. ஆனாலும், தமிழ்நாட்டு ரசிகர்கள் ஆர்வமுடன் இப்படத்தை பார்க்கிறார்கள். அதற்கு காரணம் குணா திரைப்படம் மட்டுமே. குணா படம் வெளியானபோது இப்படத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் சென்று இப்படி பார்க்கவில்லை.
ஆனால், சமூகவலைத்தளங்களில் மஞ்சும்மெல் பாய்ஸ் படம் பற்றி எல்லோரும் பதிவிட பலருக்கும் இந்த படத்தை பார்க்கும் ஆர்வம் வந்துவிடது. இந்த படத்தின் டைட்டில் கார்டு முதல் படத்தின் இறுதிக்காட்சி வரை குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடலும், பின்னணி இசையும் வருகிறது.
இதையும் படிங்க: இது கூட தெரியாமலா படம் பண்ண கூப்பிட்டாரு!. தனுஷுக்கு ஷாக் கொடுத்த மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர்…
குறிப்பாக இறுதிக்காட்சியில் அந்த பாடல் ஒலிக்கும்போது ரசிகர்கள் எழுந்து கைத்தட்டுகிறார்கள். இந்த படத்தை பார்த்த கமல்ஹாசன் இயக்குனர் மற்றும் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டி பேசியிருந்தார். உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ.100 கோடியை வசூல் செய்துவிட்டதாக ஒரு வாரத்திற்கு முன்பு செய்திகள் வெளியானது.
இந்நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் படம் உலகம் முழுவதும் ரூ.160 கோடியை வசூல் செய்துவிட்டதாக இப்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.20 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட்டே ரூ.20 கோடிதான். இதுவரை மம்முட்டி, மோகன்லால் படங்கள் கூட இந்த அளவுக்கு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.