அஜித்துக்கு 50வது திரைப்படமாக அமைந்த படம்தான் மங்காத்தா. 50 வது படம் என்றாலே அது ஒரு தனி ஸ்பெஷல்தான். அதுவும் அந்தப் படம் பெரிய வெற்றி கொடுத்து விட்டால் வரலாற்றில் முத்திரைக் குத்தப்பட்ட படமாகவும் அது அமைந்து விடும். அப்படித்தான் அஜித்துக்கும் மங்காத்தா திரைப்படம் அமைந்தது.
யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றி. அதுவும் அந்தப் படத்தில் யாருமே நினைக்காத அளவுக்கு அஜித்தின் கேரக்டரை வடிவமைத்திருந்தார் வெங்கட் பிரபு. நீங்க நல்லவரா இல்ல கெடவரா என்று கேட்கும் அளவுக்கு அஜித்தின் கேரக்டர் அமைந்திருந்தது. ஆனால் கொடுக்கப்பட்ட கேரக்டரை கணகச்சிதமாக செய்து முடித்தார் அஜித்.
வசூலில் பெரும் சாதனையையும் படைத்தது. இதையெல்லாம் விட படத்திற்கு கூடுதல் வலுவை சேர்த்தது யுவன் சங்கரின் இசைதான். அதுவரை யுவன் சங்கரின் மார்கெட் கொஞ்சம் பாதாளத்தில் கிடக்க அவரை நம்பி கொடுத்தார் அஜித். அதை சிறப்பாகவும் செய்து முடித்தார் யுவன் சங்கர் ராஜா.
இந்த நிலையில் மங்காத்தா படம் நாளை ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் ரீ ரிலீஸ் செய்கிறார்கள். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இதை பற்றி படத்தில் நடித்த அரவிந்தன் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஒரு முறை வெங்கட் பிரபுவும் அரவிந்தனும் அஜித்தை சந்தித்து பேசியிருக்கின்றனர். அப்போது அஜித்திடம் அண்ணே மீண்டும் எப்போது நாம் சேர்ந்து படம் பண்றது. மங்காத்தா 2 பண்ணாலாமா என்று அரவிந்தன் கேட்டிருக்கிறார். அதற்கு அஜித் பண்றோம், பண்றோம், கூடிய சீக்கிரம் பண்ணுவோம் என சிரித்தபடியே சொன்னாராம். ஆனால் சன் டிவி நினைத்தால் அது நடக்கும் என அரவிந்தன் கூறினார்.





