நடிகர் விஜயும், அஜித்குமாரும் ஒரே நேரத்தில் சினிமாவில் வளர்ந்தவர்கள். இருவருமே துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து அதன் பின் ஆக்சன் ஹீரோவாக மாறினார்கள்.. அஜித் பில்லா, மங்காத்தா, தீனா போன்ற படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாக மாறினார். விஜயின் பகவதி உள்ளிட்ட சில படங்கள் நடித்து அதே ரூட்டில் பணித்தார்.. விஜய்க்கு அடுத்து தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக அஜித்குமார் இருக்கிறார்.
கடந்த சில வருடங்களாகவே அஜித் விஜய் நடித்து ஏற்கனவே வெளியான திரைப்படங்களை ரி-ரிலீஸ் செய்து வருகிறார்கள். விஜயின் கில்லி திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி 20 கோடி வரை வசூல் செய்தது.. இந்நிலையில்தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா திரைப்படம் நேற்று தமிழகத்தின் பல தியேட்டர்களிலும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
விஜயின் கில்லி ரிலீஸ் முதல் நாள் சாதனையை அஜித்தின் மங்காத்தா முன்பதிவு முறியடித்திருக்கிறது.கில்லி ரீ-ரிலீஸ் முதல் நாளில் 2.15 கோடி வசூலித்த நிலையில் மங்காத்தா முன்பதிவிலெயெ 2.20 கோடியை வசூலித்து செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்..
